News April 9, 2025
USA-வை எதிர்க்க இந்தியாவை அழைக்கும் சீனா

அதிகவரி விதித்து உலக நாடுகளை டிரம்ப் அச்சுறுத்தி வருகிறார். இந்த அச்சுறுத்தல்களை சமாளிக்க இந்தியாவும், சீனாவும் பொருளாதார, வர்த்தக ரீதியில் இணைந்து செயல்பட வேண்டும் என டெல்லியில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த ஒருதலைபட்சமான நடவடிக்கையை கூட்டாக எதிர்க்க வேண்டும் எனவும், பன்முகத்தன்மையை நிலைநாட்ட வேண்டும் எனவும் உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
Similar News
News January 3, 2026
திமுகவுக்கு தகுதி இல்லை: சீமான்

இலக்கு வைத்து மது விற்கும் திமுக அரசுக்கு, போதை ஒழிப்பு பற்றி பேச தகுதி இல்லை என சீமான் கூறியுள்ளார். திருச்சியில் பேசிய அவர், உங்களுக்கு தெரியாமல் போதை பொருள் நாட்டிற்குள் வருகிறது என்று சொல்ல வெட்கமாக இல்லையா என்றும், போதைக்கு அடிமையாகாமல் குழந்தைகளை பார்த்துக்கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டு அதனை விற்பீர்களா என்றும் கேட்டுள்ளார். போதையை ஒழிப்பேன் என கூறுவதெல்லாம் வேடிக்கை எனவும் விமர்சித்துள்ளார்.
News January 3, 2026
காலையில் குறைந்து மாலையில் அதிகரித்த தங்கம் விலை

தங்கம் விலை கடந்த சில நாள்களாக கண்ணாமூச்சி காட்டி வருகிறது. 22 கேரட் தங்கத்தின் விலை காலையில் சவரனுக்கு ₹480 குறைந்திருந்த நிலையில், மாலையில் ₹640 அதிகரித்து அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சென்னையில் தற்போது 1 கிராம் ₹12,600-க்கும், 1 சவரன் தங்கம் ₹1,00,800-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
News January 3, 2026
ஜனநாயகன் புக்கிங் குறைய காரணம் என்ன?

ஜனநாயகன் பட வசூலில் 75%-80% வரை விநியோகஸ்தர்கள் கேட்பதாக தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் அவர், TN-ல் 60% தியேட்டர்களில் JN வெளியிடவே விரும்புகின்றனர். ஆனால் கேரளாவில் 60% கேட்கும் நிலையில், TN-ல் 75% கேட்கிறார்கள். இதுதான் ஜனநாயகன் புக்கிங் குறைய காரணம். இதை விஜய்யின் காதுக்கு கொண்டு சென்றுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.


