News September 14, 2024
சிறுமியிடம் சில்மிஷம்: அடித்தே கொன்ற குடும்பத்தினர்

பீகாரில் இருந்து டெல்லி செல்லும் ஹம்சாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் 11 வயது சிறுமியிடம் இளைஞர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதை அந்த சிறுமி, பெற்றோரிடம் கூறவே, அவர்களும், மற்ற பயணிகளும் சேர்ந்து அந்த இளைஞரை கடுமையாக தாக்கினர். பின்னர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட அவர், சில நிமிடங்களிலேயே உயிரிழந்தார். விசாரணையில், அவர் பீகாரை சேர்ந்த ரயில்வே ஊழியர் பிரசாந்த் குமார் (34) என்பது தெரியவந்தது.
Similar News
News February 22, 2026
கோவையில் பெண் கொன்று எரிப்பு! இளைஞர் கைது

இரு தினங்களுக்கு முன் துடியலூர் வட்டமலைபாளையம் அருகே இளம்பெண் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். துடியலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில் இறந்து கிடந்தவர் செங்காளிபாளையத்தை சேர்ந்த அனிதா என்பதும், ஏற்கனவே திருமணமான நிலையில் தமிழ்ச்செல்வனுடன் பழக்கம் ஏற்பட்டு வாக்குவாதத்தில் அவரை அடித்து கொலை செய்து எரித்ததும் தெரிந்தது. எலும்பு முறிந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
News February 22, 2026
ஞாயிறு அன்று இதை செய்தால் தீராத கடனும் தீரும்

இரவு 8 – 11.30 மணிக்குள் எந்த நேரத்திலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். 4 மிளகை எடுத்துக்கொண்டு, நிலை வாசலுக்கு வெளியே வாருங்கள். குலதெய்வத்தை மனதார வேண்டி கையில் இருக்கும் மிளகை தலைக்கு இடது புறமாக 3 முறை மட்டும் சுற்றுங்கள். அதன் பிறகு, 4 மிளகையும் 4 திசைகளில் கண்ணுக்கு தெரியாமல் தூர எறிந்து விடுங்கள். அவ்வளவுதான். இதை 3 வாரம் தொடர்ந்து செய்தால், கஷ்டம் நீங்கும் என்பது ஐதீகம்!
News February 22, 2026
தங்கம் விலை ஒரேநாளில் பெரிய அளவில் மாறியது

நேற்றைய முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ₹640 குறைந்த நிலையில், நேற்று ஒரேநாளில் மீண்டும் உயரத் (சவரனுக்கு ₹2,080) தொடங்கியது. இதன்படி, இந்த வார வர்த்தக நேர முடிவில் 1 கிராம் தங்கம் ₹14,680-க்கும், 1 சவரன் ₹1,17,440-க்கும் விற்கப்பட்டு வருகிறது. மேலும், சர்வதேச சந்தையிலும் உயர்வுடனே வர்த்தகம் நிறைவுற்றதால் வரும் நாள்களிலும் விலை உயரும் என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.


