News January 11, 2025
வரும் 24இல் ‘குழந்தைகள் முன்னேற்ற கழகம்’ ரிலீஸ்

‘குழந்தைகள் முன்னேற்ற கழகம்’ படம், வரும் 24ஆம் தேதி ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துள்ளது. யோகி பாபு, செந்தில், அகல்யா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை ஷங்கர் தயால் இயக்கியுள்ளார். நகைச்சுவை கலந்த அரசியல் பேசும் வகையில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சினிமா செய்திகள் குறித்து உடனுக்குடன் அறிய WAY2NEWS APPஐ டவுன்லோடு செய்யுங்கள்.
Similar News
News January 19, 2026
கிரீன்லாந்தில் டிரம்புக்கு எதிராக பேரணி

கிரீன்லாந்தை கையகப்படுத்தும் அமெரிக்க அதிபர் டிரம்பின் முயற்சிக்கு எதிராக, அந்நாட்டு மக்கள் ‘கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல’ என்ற முழக்கத்துடன் பேரணி நடத்தினர். கிரீன்லாந்து மட்டுமின்றி டென்மார்க்கின் முக்கிய நகரங்களில் போராட்டம் நடைபெறுகிறது. கிரீன்லாந்தை கைப்பற்ற நினைக்கும் டிரம்பின் முயற்சிக்கு ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
News January 19, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 19, தை 5 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:30 AM – 7:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: பிரதமை ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.
News January 19, 2026
அமெரிக்க வரி உயர்வால் கோவையில் பாதிப்பு

அமெரிக்காவில் இந்தியா சார்ந்த பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்பட்டதால், குறிப்பாக ஜவுளி துறையில் கோவையும் திருப்பூரும் பெரும் பாதிப்புகளை சந்திக்கின்றன. மேலும் மூலப்பொருட்களின் விலை உயர்வால் ஜவுளி, வார்ப்படம், மோட்டார் பம்ப் தொழில் நிறுவனங்களில் உற்பத்தி குறைந்துள்ளது. இதன் காரணமாக தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக ஜவுளி தொழில் துறையினர் கூறுகின்றனர்.


