News October 8, 2025

குழந்தைகளின் செல்போன் Addiction.. பயங்கர டேஞ்சர்!

image

செல்போன் Addiction மனதளவிலும், உடலளவிலும் பெரும் பாதிப்புகளை உண்டாக்கும் என எச்சரிக்கப்படுகிறது. சென்னையில் வெங்கடேசன் என்ற +1 மாணவன், பள்ளியிலேயே மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார். காலாண்டு விடுமுறையில் அவர் அதிகளவில் மொபைல் பயன்படுத்திய நிலையில், அடிக்கடி பயங்கரமாக தலை வலிப்பதாகவும் கூறியிருக்கிறார். உங்களின் செல்போன் பயன்பாட்டை குறைங்க. இத்தகவலை நண்பர்களுக்கு அதிகளவில் ஷேர் பண்ணுங்க!

Similar News

News October 8, 2025

உருக்கமாக மன்னிப்பு கேட்டார் விஜய்

image

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தாரிடம் விஜய் பேசியபோது, தனது மன்னிப்பை தெரிவித்துள்ளார். தம்பியை பறிகொடுத்த பெண் ஒருவர் அளித்த பேட்டியில், உங்கள் இழப்பு தாங்க முடியாத இழப்பு, என்னை (விஜய்) தம்பியாக நினைத்து கொள்ளுங்கள். என்மீது தப்புதான்; என்னை மன்னிச்சிடுங்க. வரமுடியாத சூழலில் போயிட்டேன். கோர்ட் ஆர்டர் வந்ததும் உங்களை வந்து சந்திக்கிறேன் என விஜய் உருக்கமாக பேசியதாக தெரிவித்துள்ளார்.

News October 8, 2025

N.ஆனந்த் பதுங்கியிருக்கும் இடம் இதுவா? Official தகவல்

image

கரூர் துயரத்தை அடுத்து தவெக பொதுச்செயலாளர் N.ஆனந்தையும், நிர்மல் குமாரையும் தேடிவருகிறது போலீஸ். இவர்கள் புதுச்சேரியில் பதுங்கியிருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து அம்மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் விளக்கமளித்துள்ளார். புதுச்சேரியில் ஆனந்த் பதுங்கியிருக்கிறாரா என்பது பற்றி எதுவும் தெரியாது எனவும், இதுகுறித்து TN போலீஸ் தங்களை அணுகவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News October 8, 2025

பிரபல பாடகர் மரணம்.. கண்ணீர் அஞ்சலி

image

பஞ்சாபி பாடகரும் நடிகருமான ராஜ்வீர் ஜவாண்டா உயிரிழந்தார். சிம்லாவின் சோலன் என்ற பகுதியில் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது இவர் சாலை விபத்தில் சிக்கினார். இதில் பலத்த காயமடைந்து 11 நாள்களாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிர் பிரிந்தது. அவரது மறைவிற்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் பலரும் கண்ணீருடன் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!