News April 14, 2025

விடுமுறையில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் பலி… சோகம்!

image

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி விடுமுறை என்பதால் சிறுவர்கள் வெள்ளியங்கால் ஓடையில் குளிக்கச் சென்றபோது, அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. அதேபோல, ஒகேனக்கல் ஆற்றில் சுற்றுலா வந்த 2 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அடுத்தடுத்து நடைபெற்ற இச்சம்பவங்கள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்களே, குழந்தைகளை கவனிங்க.

Similar News

News April 16, 2025

காலை 7 மணி வரை மழை

image

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, ராமநாதபுரம், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் காலை 7 மணி வரை மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது. இருப்பினும், காலை 10 மணிக்கு மேல் வெயிலும் அதிகமாக இருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

News April 16, 2025

வரலாற்றில் இன்றைய தினம்

image

> அமெரிக்காவில் அடிமை முறையை ஒழிக்கும் சட்டம் அமலுக்கு வந்தது (1862)
> ஜாலியன் வாலா பாக் படுகொலையை கண்டித்து காந்தி ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார் (1919)
> கியூபாவை ஒரு பொதுவுடைமை நாடு என்று பிடெல் காஸ்ட்ரோ அறிவித்தார் (1961)
> முதலாவது உலக தமிழ் மாநாடு மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றது (1966)

News April 16, 2025

வான்கடே மைதானத்தில் ஜொலிக்கும் ரோகித் பெயர்

image

ரோகித் சர்மாவை கவுரவிக்க மும்பை கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது. ஆம்! வான்கடே மைதானத்தில் ஒரு கேலரி-க்கு இந்திய கேப்டன் ரோகித் சர்மாவின் பெயரை வைக்க, மும்பை கிரிக்கெட் சங்க ஆண்டு பொதுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல் முன்னாள் BCCI தலைவர் சரத் பவார் மற்றும் பேட்டிங் ஜாம்பவான் அஜித் வடேகர் ஆகியோரின் நினைவாக மேலும் இரண்டு கேலரிகளுக்கு பெயரிடப்படும் என்றும் MCA உறுதிப்படுத்தியுள்ளது.

error: Content is protected !!