News May 8, 2025
குழந்தைகளுக்கு ‘சிந்தூர்’ என்று பெயரிடப்படுகிறது!

‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் இந்தியர்களின் உயிரை பறித்த மனித அரக்கர்களான பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் கொன்று குவித்தது. இதை இந்தியர்கள் கொண்டாடுகிறார்கள். இச்சம்பவம் என்றென்றும் நினைவில் இருக்கும் வகையில், மே 7-ல் பிறந்த தங்கள் குழந்தைகளுக்கு சிலர் இப்பெயரை சூட்டத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், பிஹாரில் குந்தன் குமார் என்பவர் தனது மகளுக்கு ‘சிந்தூர்’ என்று பெயரிட்டு, தேசபக்தியை வெளிப்படுத்தினார்.
Similar News
News November 28, 2025
லோகேஷ் இயக்கத்தில் அல்லு அர்ஜுனா?

லோகேஷிடம் கதை கேட்ட அல்லு அர்ஜூன், அக்கதை பிடித்துப்போக ஸ்கிரிப்ட் வேலைகளை உடனே தொடங்க சொல்லியதாக தகவல் வெளியாகியுள்ளது. அல்லு, தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். அதேநேரம், ‘கூலி’ பட தோல்விக்கு பிறகு ‘DC’ படத்தில் நடித்து வரும் லோகேஷ், ‘கைதி 2’ படத்தை இயக்கும் முனைப்பில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. லோகேஷ் – அல்லு அர்ஜுன் காம்போ எப்படி இருக்கும்?
News November 28, 2025
கேட்ட வரத்தை தரும் நட்சத்திர தீப வழிபாடு!

திருவோண நட்சத்திரத்திற்கு முன் 24 நிமிடங்கள் மட்டுமே வரும் அபிஜித் நட்சத்திரத்திடம் முழு மனதோடு வேண்டினால், கேட்ட வரங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். அகல் விளக்கில் 1 ஸ்பூன் பச்சை பயிரை சேர்த்து, நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். கிருஷ்ணரின் படத்திற்கு முன் இந்த தீபத்தை ஏற்றி வைத்து, முழு மனதோடு ஏதாவது ஒரு காரியத்தை முன்வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இப்பதிவை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News November 28, 2025
விஜய் அப்போ பிறக்கவே இல்லை.. படிச்சி பாருங்க பாஸ்

1972-ல் செங்கோட்டையன் அதிமுகவில் இணைந்தபோது, விஜய் பிறக்கவேயில்லை. ஆம், விஜய் பிறந்தது 1974-ல் தான். 1977-ல் முதல்முறையாக KAS, MLA ஆன போது, விஜய்க்கு வயது 3. 1989-ல் ஜெ., ஜானகி அணிகள் என அதிமுக பிரிந்தபோது, விஜய் குழந்தை நட்சத்திரமாக இருந்தார். 1991 – 1996 காலகட்டத்தில் KAS முதல்முறையாக அமைச்சரான போதுதான், விஜய் ஹீரோவாக (நாளைய தீர்ப்பு – 1992) எண்ட்ரி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


