News December 24, 2024
குழந்தை திருமணம்: தமிழகத்தில் 56% அதிகரிப்பு

குழந்தை திருமணத்தை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும், முடிவு கட்ட முடியவில்லை. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு 56% அதிகரித்திருப்பது புள்ளி விவரம் மூலம் தெரிய வந்துள்ளது. கடந்தாண்டில் 1,054 குழந்தை திருமணங்கள், இந்தாண்டில் இதுவரை 1,640 குழந்தை திருமணங்கள் நடந்திருப்பதும் உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக நெல்லை, ஈரோட்டில் அதிக திருமணங்கள் நடந்துள்ளன.
Similar News
News September 7, 2025
கில்லுக்காக ரோஹித்தை ஓரங்கட்ட முடிவு?

வரும் அக்டோபரில் நடைபெற உள்ள AUS-க்கு எதிரான 3 ODI போட்டிகள் தான், ரோஹித் கேப்டனாக இருக்கும் கடைசி போட்டிகள் என கூறப்படுகிறது. அந்த தொடரை அடுத்து, சுப்மன் கில்லுக்கு ODI கேப்டன் பதவி வழங்கப்படலாம் என BCCI வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2027 ODI உலகக்கோப்பை வரை, ரோஹித்தின் ஃபார்ம், வயது முதிர்வு குறித்த கவலைகள் எழுந்துள்ள நிலையில், இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
News September 7, 2025
₹200 கோடி வசூலை நெருங்கும் ‘லோகா’

இந்தியாவின் முதல் ‘Super Women’ படமான ‘லோகா சாப்டர் 1: சந்திரா’, விரைவில் ₹200 கோடி வசூலை எட்ட உள்ளது. கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ள இப்படம், இதுவரை உலகம் முழுவதும் ₹175+ கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால், வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ₹30 கோடி பட்ஜெட்டில் துல்கர் சல்மான் தயாரித்த இப்படத்தை, டொமினிக் அருண் இயக்கியுள்ளார்.
News September 7, 2025
நாளை பள்ளி ஆசிரியர்கள் தயாரா இருங்க!

2012-ம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் TET தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை(செப்.8) மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. விண்ணப்பிக்க விரும்பும் ஆசிரியர்கள் trb.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அவர்களுக்கான தேர்வு நவம்பரில் நடைபெற உள்ளது. SHARE IT.