News April 22, 2025
தவெகவினருக்கு தலைமை உத்தரவு

2026 தேர்தலை நோக்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் விஜய், விரைவில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில், விஜய்யின் வாகன பிரச்சாரத்திற்கு முன்னதாக, கொள்கை குறித்து கட்சி நிர்வாகிகள் வாகன பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என தலைமை உத்தரவிட்டுள்ளது. கட்சித் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்த நிலையில், தவெக கொள்கையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 12, 2025
உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ₹10 லட்சம் நிவாரணம்

தலைநகர் டெல்லியில் கார் வெடித்த சம்பவம் நாட்டையே பதற்றமடைய வைத்தது. இந்நிலையில் உயிரிழந்த 12 பேரின் குடும்பத்துக்கும் ₹10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. அதேபோல் விபத்தில் கை, கால்களை இழந்தவர்களுக்கு ₹5 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ₹2 லட்சமும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு டெல்லி அரசு துணை நிற்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 12, 2025
குளிர்காலத்தில் இந்த கஷாயத்தை கட்டாயமா குடிங்க!

குளிர்காலத்தில் ஏற்படும் மூச்சுத் திணறல், சுவாசிப்பதில் சிரமம் போன்றவற்றில் இருந்து நிவாரணம் பெற, சோம்பு கஷாயம் குடிக்க சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱தேவையானவை: சோம்பு, எலுமிச்சைச் சாறு ✱செய்முறை: தண்ணீரில் போட்டு, சோம்பை 5- 7 நிமிடங்கள் வரை நன்றாக கொதிக்க வைக்கவும். பிறகு, அதனை வடிகட்டி, அதில் தேவைக்கேற்ப எலுமிச்சைச் சாற்றை சேர்த்து குடிக்கலாம். நண்பர்களுக்கும் இப்பதிவை ஷேர் பண்ணுங்க.
News November 12, 2025
ஏ.ஆர்.ரஹ்மானை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்

பாலியல் வழக்கில் சிறை சென்று ஜாமினில் வந்த ஜானி மாஸ்டர், AR ரஹ்மான் எடுத்துக்கொண்ட போட்டோ வைரலாகி சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘பெடி’ படத்தில் இருவரும் ஒன்றாக பணியாற்றும் நிலையில், இந்த போட்டோ எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு, பாலியல் வழக்கில் தொடர்புடையவருடன் ரஹ்மான் இணைந்து பணியாற்றுவது சரியா என நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் கேள்வி எழுப்பியுள்ளனர்.


