News October 19, 2024
ஆளுநருக்கு முதல்வர் கேள்வி

தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக பக்தியோடு பாடுவேன் எனச் சொல்லும் ஆளுநர், இன்று முழுமையாகப் பாடப்படாதபோது மேடையிலேயே கண்டித்திருக்க வேண்டாமா என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தனக்கு எதிராக இனவாதக் கருத்தை முதல்வர் முன்வைப்பதாக ஆளுநர் குற்றஞ்சாட்டியிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள ஸ்டாலின், இந்த மண்ணின் தாய்மொழிப் பற்றினை இனவாதம் என்றால் அது எங்களுக்குப் பெருமைதான் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News July 6, 2025
டிரம்புக்கு மோடி பணிவார்: ராகுல் காந்தி

இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தகம் தொடர்பாக மிகப்பெரிய ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்நிலையில் இது குறித்து பேசிய பியுஷ் கோயல், இருதரப்புக்கும் பயனளிக்க கூடியதாகவும், வெற்றியளிக்கூடியதாக ஒப்பந்தம் இருந்தால் மட்டுமே அது ஏற்றுக்கொள்ளதக்க ஒப்பந்தமாகும் இருக்குமென்றார். இதற்கு X பக்கத்தில் பதிலளித்த ராகுல், டிரம்பின் வரி காலக்கெடுவுக்கு மோடி பணிவுடன் தலைவணங்குவார் என விமர்சித்துள்ளார்.
News July 6, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஜூலை 6 – ஆனி – 22 ▶ கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 3:15 PM – 4:15 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶ எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 AM – 4:30 AM ▶திதி: ஏகாதசி▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: வளர்பிறை.
News July 6, 2025
வேகமாக சுழலப் போகும் பூமி… காரணம் தெரியுமா?

நாம் வாழும் பூமி, மணிக்கு 1,600 கிமீ வேகத்தில் தன்னைத்தானே சுற்றிச் சுழல்கிறது. இந்நிலையில், வரும் ஜூலை 9, ஜூலை 22, ஆகஸ்ட் 5 ஆகிய 3 நாள்களிலும் சற்று அதிகமான வேகத்தில் பூமி சுழலப் போவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஒரு நாளில் 1.51 மில்லி செகண்ட் குறையுமாம். பூமியின் வேகத்துக்கு காரணம் இதுவரை தெளிவாக தெரியவில்லை. எனினும், இதனால், எந்த பாதிப்பும் ஏற்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.