News July 4, 2025
முதல்வர் வேட்பாளர் விஜய் .. தவெக தலைமையில் கூட்டணி

2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்றும் கூட்டணி குறித்து முடிவெடுப்பதற்கான முழு அதிகாரமும் விஜய்க்கு அளிக்கப்படுவதாகவும் செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆகஸ்டில் தவெக மாநில மாநாடு நடைபெறும் என்றும், அக்., முதல் டிச., வரை தமிழகம் முழுவதும் விஜய் மக்களை சந்திப்பார் எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 4, 2025
சனி வக்ர பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்

வரும் ஜூலை 13-ல் மீன ராசிக்கு வக்ர பெயர்ச்சி அடையும் சனி, நவ.28 வரை அதே நிலையில் நீடிப்பார். இதனால் பலன் பெறும் ராசியினர்: *மிதுனம்: வாய்ப்புகளும், வருமானமும் அதிகரிக்கும். மன அமைதி கிடைக்கும். தடை நீங்கும் *கன்னி: பணவரவுக்கான புதிய வழிகள் திறக்கும். உறவுகள் மேம்படும். *தனுசு: தொழிலில் முன்னேற்றம், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்கும். நிதிநிலை வலுவாகும். ஆரோக்கியம் மேம்படும்.
News July 4, 2025
சைவ உணவு சாப்பிடுபவரா… இத கவனிங்க

அசைவ உணவு சாப்பிடும் பெண்களைவிட, சைவ உணவு சாப்பிடும் பெண்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் 33% அதிகம் என்று லீட்ஸ் பல்கலை., நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஊட்டச்சத்து குறைபாடு என்று சொல்லும் ஆய்வாளர்கள், எலும்பு & தசைகள் உறுதிக்கு தேவையான புரதம், கால்சியம் மற்றும் நுண் ஊட்டச்சத்துகளை தேவையான அளவு சேர்த்துக் கொண்டால் இந்த ஆபத்தை தவிர்க்கலாம் என்கின்றனர்.
News July 4, 2025
இரவு மழை வெளுக்க போகுது: IMD

தமிழகத்தில் இரவு 10 மணி வரை 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. திருவள்ளூர், நீலகிரி, திருப்பூர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாம். அதேபோல் சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி அகிய மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடுமாம். உங்க ஊரில் மழை பெய்யுதா?