News March 15, 2025
முதல்வர் ஸ்டாலின் சிறை செல்வார்: தம்பிதுரை

மதுபான முறைகேடு வழக்கில் கெஜ்ரிவால் போல முதல்வர் ஸ்டாலினும் சிறைக்கு செல்வார் என்று அதிமுக MP தம்பிதுரை தெரிவித்துள்ளார். டெல்லி மதுபான முறைகேடு வழக்கில்தான் அப்போதைய முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். தற்போது, தமிழ்நாட்டிலும் டாஸ்மாக்கில் ₹1000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக ED தெரிவித்திருக்கும் நிலையில், தம்பிதுரை இவ்வாறு பேசியுள்ளார்.
Similar News
News July 4, 2025
Padman திரைப்பட பாணியில் காங்கிரஸ் பிரச்சாரம்

பெண்களுக்கு நாப்கின் அவசியத்தை வலியுறுத்தி Padman எனும் ஹிந்தி படம் உள்ளது. தற்போது அதைப்போன்ற சம்பவம் பீகாரில் நடைபெறுகிறது. அம்மாநில தேர்தலை முன்னிட்டு சானிட்டரி நாப்கின் கொடுக்கும் பிரச்சாரத்தை காங்கிரஸ் துவங்கியுள்ளது. அந்த நாப்கின் கவர்களில் ராகுல், ப்ரியங்கா படங்கள் உள்ளன. மாதவிடாய் காலத்தில் பெண்கள் சுகாதாரத்துடன் இருப்பதை வலியுறுத்தியே இப்பிரச்சாரம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News July 4, 2025
தங்கம் விலை சவரனுக்கு ₹440 குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ₹440 குறைந்தது. இதனால், 22 கேரட் ஒரு கிராம் ₹9,050-க்கும், சவரன் ₹72,400-க்கும் விற்பனையாகிறது. கடந்த 3 நாள்களாக தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வந்த நிலையில், சர்வதேச <<16934070>>சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றம்<<>> காரணமாக இந்தியாவிலும் தங்கம் விலை சற்று சரிந்துள்ளது.
News July 4, 2025
சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்

ஜூலை 7-ம் தேதி சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும் என வணிகவரித்துறை தெரிவித்துள்ளது. ஒரு சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100-க்கு பதில் 150 டோக்கன்கள் வழங்கப்படும் எனவும் 2 சார் பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களில் 200-க்கு பதில் 300 முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனி மாத சுபமுகூர்த்த நாளையொட்டி இந்த ஏற்பாடு செய்யப்படுள்ளது.