News August 27, 2025
பிஹார் செல்லும் முதல்வர் ஸ்டாலின்

வாக்கு திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து பிஹாரில் ராகுல் காந்தி யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரையில் பங்கேற்க இன்று CM ஸ்டாலின் பிஹார் செல்கிறார். காலை 7.30 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் பிஹார் செல்லும் அவர், 10.30 மணிக்கு நடைபயணம் மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர், பிற்பகல் 2.40 மணிக்கு ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.
Similar News
News August 27, 2025
Engagement முடிஞ்சாச்சு.. காதலரை கரம்பிடிக்கும் நடிகை!

உலக அளவில் பிரபலமான பாடகியும், ஹாலிவுட் நடிகையுமான டெய்லர் ஸ்விஃப்ட்க்கும், டிராவிஸ் கெல்ஸுக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. தனது நிச்சயதார்த்த போட்டோஸை டெயிலர் ஸ்விஃப்ட் வெளியிட, அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. 1989, Folklore போன்ற ஆல்பங்களின் மூலம் உலகளவில் பிரபலமடைந்த டெயிலர் ஸ்விஃப்ட் The Lorax, Amsterdam போன்ற ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.
News August 27, 2025
பிஹார் புறப்பட்டார் CM ஸ்டாலின்

வாக்கு திருட்டு குற்றச்சாட்டை கூறி, பிஹாரில் ராகுல் காந்தி யாத்திரை நடத்தி வருகிறார். இந்நிலையில், இதில் பங்கேற்பதற்காக CM ஸ்டாலின் பிஹார் புறப்பட்டுள்ளார். சிறப்பு விமானம் மூலம் பிஹார் செல்லும் அவர், 10.30 மணிக்கு யாத்திரையில் கலந்துகொண்டு பொதுக்கூட்டத்தில் பேசவுள்ளார். இதனையடுத்து, பிற்பகல் 2.40 மணிக்கு CM சென்னை திரும்புகிறார்.
News August 27, 2025
ஸ்டாலின் Vs இபிஎஸ்.. சொத்து மதிப்பில் யார் டாப்?

பணக்கார முதலமைச்சர்களின் பட்டியலில், ₹8.8 கோடி சொத்துகளுடன் CM ஸ்டாலின் 14-வது இடம் பிடித்தார். இந்நிலையில், முன்னாள் முதல்வர் EPS-யின் சொத்து பின்னணி குறித்து அறிய பலரும் ஆர்வம் காட்டியுள்ளனர். 2021-ன் படி, EPS ₹6 கோடிக்கும் அதிகமாக சொத்து வைத்திருக்கிறார். ஸ்டாலினுடன் ஒப்பிடுகையில் EPS சொத்து மதிப்பு ₹2 கோடி குறைவு. இன்னும் 8 மாதங்கள் காத்திருந்தால் லேட்டஸ்ட் சொத்து விவரங்கள் தெரிந்து விடும்.