News March 24, 2025
அதிமுகவுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஆதரவாக நிற்கும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு நன்றி என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக தமிழக எம்.பி.க்கள் பிரதமரைச் சந்திக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த உரையின் முடிவில் “தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்” என்ற முழக்கத்தையும் முதல்வர் முன் வைத்தார்.
Similar News
News November 7, 2025
INDIAN CITIZEN-ஆன ஆஸ்திரேலிய வீரர்

ஆஸ்திரேலிய கால்பந்து வீரர் ரியான் வில்லியம்ஸ், அந்நாட்டின் குடியுரிமையை துறந்து இந்திய குடியுரிமையை பெற்றுள்ளார். அவருடைய தாய் மும்பையை சேர்ந்த ஆங்லோ-இந்தியன் என்பதால் குடியுரிமையை பெற ஓராண்டு காலமாக முயற்சித்து வந்தார். இந்திய குடிமகனாக இருப்பதையே விரும்புவதாக அவர் அவ்வப்போது தெரிவித்திருக்கிறார். சர்வதேச போட்டிகளில் கலக்கிய இவர், இனி இந்தியராக Bengaluru FC அணியில் விளையாடவுள்ளார்.
News November 7, 2025
வங்கிக் கணக்கில் பணம்.. உடனே செக் பண்ணுங்க

2-10 ஆண்டுகள் வரை செயல்பாட்டில் இல்லாத அக்கவுண்டில் உள்ள பணத்தை எடுக்காமலே விட்டுவிட்டீர்களா? உங்களுக்காக RBI புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வாடிக்கையாளர் (அ) வாரிசுதாரர்கள் இந்த பணத்தை வட்டியுடன் பெற முடியும். நீண்ட காலமாக செயல்பாட்டில் இல்லாத உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க KYC ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். உங்கள் பழைய வங்கி கணக்கின் பேலன்ஸை <
News November 7, 2025
சர்வர் கோளாறால் டெல்லியில் விமான சேவை பாதிப்பு!

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் (ATC) ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான நிலைய செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியுள்ளன. கோளாறை சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பயணிகள் தங்கள் விமான நிறுவனங்களை தொடர்புகொண்டு நிலவரங்களை தெரிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


