News July 4, 2024

நேரில் சென்று வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்

image

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோல் சச்தேவ் என்பவருக்கும் திருமண வரவேற்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் மணமக்களுக்கு மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி வாழ்த்தினார். முதல்வருடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் இந்த விழாவில் கலந்துகொண்டார்.

Similar News

News September 22, 2025

உடல் உறுப்புகளை காலி செய்யும் பழக்க வழக்கங்கள்

image

வயதானவர்களுக்கு வரும் நோய் பாதிப்புகள் இப்போது இளம் தலைமுறையினரையே வாட்டி வதைக்க ஆரம்பித்துவிட்டது. இதற்கு காரணம் நமது உணவு முறை மற்றும் பிற பழக்கம் வழக்கம்தான். நமக்கே தெரியாமல் நமது பழக்க வழக்கங்கள் பல உடல் உறுப்புகளுக்கு எமனாக மாறுகின்றன. அந்த தவறான பழக்க வழக்கங்கள் என்னென்ன என்பதை மேலே போட்டோஸாக கொடுத்துள்ளோம். ஒவ்வொன்றாக SWIPE செய்து அறிந்து கொள்ளுங்கள்.

News September 22, 2025

பெண்கள் திமுக மீது கோபத்தில் உள்ளனர்: அன்புமணி

image

போதைப் பொருள் புழக்கத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக அன்புமணி விமர்சித்துள்ளார். விவசாயிகள், மக்களை காப்பாற்ற முடியாத நிலையில் திமுக இருப்பதாகவும், பெண்கள் இப்போதைய ஆட்சி மீது கோபத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்த 505-ல், 66 மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். திமுக ஆட்சியில் ஆறு, குளம், கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை எனவும் சாடியுள்ளார்.

News September 22, 2025

குழந்தை பெற்றுக் கொண்டால் ₹3 லட்சம் பரிசுத்தொகை

image

குழந்தையை பெற்றுக்கொண்டால் கூடுதல் சுமை என யோசிக்கும் பலர் உலகில் இருக்கதான் செய்கிறார்கள். ஆனால், தைவான் மக்கள் அப்படி யோசிக்க மாட்டார்கள். ஏனென்றால் அங்கு ஒரு குழந்தை பெற்றால் ₹3 லட்சம், இரட்டை குழந்தை பிறந்தால் ₹6 லட்சமும் வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சீனாவின் ஆக்கிரமிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், தைவான் மக்கள் தொகையை அதிகரிக்க இத்திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

error: Content is protected !!