News June 5, 2024
முதல்வர் ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு சந்திப்பு

டெல்லி விமான நிலையத்தில் ஆந்திராவின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடுவை முதல்வர் ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். டெல்லியில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற உள்ள INDIA கூட்டணி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். அப்போது NDA கூட்டணி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக டெல்லி வந்த சந்திரபாபுவை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
Similar News
News March 6, 2026
UPSC தேர்வில் 2-ம் இடம் பிடித்த தமிழக மாணவி

TN-ல் துணை ஆட்சியராக பணியாற்றும் ராஜேஸ்வரி சுவி UPSC தேர்வில் 2-ம் இடம் பிடித்து அசத்தியுள்ளார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்த அவர், ஏற்கெனவே TNPSC குரூப் 1 தேர்வில் மாநில அளவில் 11-வது இடம் பிடித்து துணை ஆட்சியராக உள்ளார். 2018-ம் ஆண்டு தனது பொறியியல் பட்டப்படிப்பை முடித்த அவர், போட்டி தேர்வுக்கு தீவிரமாக படித்து இன்று IAS அதிகாரியாக உயர்ந்துள்ளார். இந்த சிங்கப் பெண்ணை வாழ்த்தலாமே!
News March 6, 2026
கடைசி தோட்டா இருக்கும் வரை போராடுவோம்: ஈரான்

அமெரிக்க – இஸ்ரேல் படையெடுப்பை எதிர்த்து போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஈரான் வெளியுறவு துணை அமைச்சர் சயீத் கதிப்சாதே கூறினார். கடைசி தோட்டாவும் கடைசி வீரரும் களத்தில் இருக்கும் வரை போராடுவோம் என்றும் கூறியுள்ளார். <<19300689>>IRIS தேனா கப்பல்<<>> இந்தியாவின் அழைப்பின் பேரில் வந்ததாகவும், எந்த ஆயுதங்களும் இல்லாத நிராயுதபாணிகளை அமெரிக்கா தாக்கியுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
News March 6, 2026
அஜித் குமார் மரணம்.. அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்

<<19303686>>காவலாளி அஜித் குமார்<<>> மரண வழக்கில் மதுரை ஐகோர்ட் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. கூடுதல் குற்றப்பத்திரிகையில் மானாமதுரை டிஎஸ்பி உள்ளிட்ட 4 போலீஸ்காரர்களின் பெயர்களை CBI சேர்த்திருந்தது. இந்நிலையில், மார்ச் 12 வரை அந்த 4 பேர் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. பதில் மனு தாக்கல் செய்யும் வரை சிபிஐ எந்த விசாரணையும் நடத்தக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


