News May 28, 2024
டெல்லி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

ஜூன் 1ஆம் தேதி நடைபெறவிருக்கும் I.N.D.I.A கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்லவிருக்கிறார். தேர்தல் முடிவுக்குப் பின் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க I.N.D.I.A கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது. 7ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால் தன்னால் வர முடியாது என்று மம்தா ஏற்கெனவே கூறியிருக்கிறார்.
Similar News
News September 17, 2025
சமூக நீதி பற்றி பேச திமுகவுக்கு அருகதை இல்லை: அன்புமணி

வன்னியர் இட ஒதுக்கீட்டுக்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு அன்புமணி அஞ்சலி செலுத்தினார். இதன்பின் அவர் பேசுகையில், வன்னியர் இடஒதுக்கீடு பற்றி கவலைப்படாத திமுகவுக்கு, அந்த சமூக மக்களின் வாக்கு மட்டும் வேண்டுமா என்று கேள்வி எழுப்பினார். சமூக நீதி பற்றி பேச திமுகவுக்கு எந்த அருகதையும் கிடையாது என்று சாடிய அவர், 15% இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, டிச.17-ல் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்றார்.
News September 17, 2025
படி ஏறவே மூச்சுத்திணறும் ‘மின்னல் மேன்’

ஒரு காலத்தில் 100 மீட்டரை 9.58 செகண்டில் ஓடிய உலகின் மின்னல் வேக மனிதன் உசைன் போல்ட், தற்போது மாடிப் படி ஏறவே தான் சிரமப்படுவதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 2017-ல் ஓய்வு பெற்றபின், டிவி பார்ப்பது, குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவது என லைஃப்ஸ்டைல் மாறிவிட்டதால், உடற்பயிற்சி செய்வது குறைந்துவிட்டதாகவும் தெரிவித்த அவர், மீண்டும் ஓட்டப்பயிற்சி செய்ய வேண்டும் என நினைப்பதாகவும் கூறியுள்ளார்.
News September 17, 2025
சோக மரணம்.. உதயநிதி நேரில் அஞ்சலி

கரூரில் இன்று நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில், கட்சியின் முன்னோடி உறுப்பினரான குளித்தலை சிவராமனுக்கு பாவேந்தர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், விருதை பெறும் முன்னரே உடல் நலக் குறைவால் அவர் மறைந்தது கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், அவரது வீட்டிற்குச் சென்ற உதயநிதி ஸ்டாலின், சிவராமன் படத்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.