News August 11, 2024
வதந்திக்கு முதல்வர் முற்றுப்புள்ளி

முதல்வர் ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லை என்றும், இதனால் நடப்பதற்கே சிரமப்படுகிறார் என்றும் கூறப்பட்டு வந்தது. அந்த பேச்சுக்கு கருணாநிதி நினைவு நாளன்று முதல்வர் ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்தார். கருணாநிதி நினைவுநாளையொட்டி ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அவர் படத்துக்கு முதலில் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதையடுத்து மெரினாவுக்கு நடந்து சென்று கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
Similar News
News March 25, 2026
கம்யூனிஸ்டுகளை மேலும் நெருக்குகிறதா திமுக?

தேர்தலுக்காக 5 தொகுதிகளை பெற்றுக்கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகள், கையோடு தொகுதிகளுக்கான உத்தேச பட்டியலை திமுகவிடம் வழங்கியிருக்கிறதாம். ஆனால் அதிலும் பல நிபந்தனைகளை திமுக விதித்துள்ளது என்கின்றனர். தாங்கள் ஜெயிப்பதற்கான வாய்ப்பு அதிகமுள்ள தொகுதிகளை கேட்கவே வேண்டாம் என திமுக கறார் காட்டுகிறதாம். இதனால் ஏற்கெனவே திருப்தி இல்லை என்ற கம்யூனிஸ்டுகள் தற்போது கொதிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
News March 25, 2026
சர்வதேச சந்தையில் தங்கம் விலை கிடுகிடு உயர்வு!

சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் ஜெட் வேகத்தில் உயரத் தொடங்கியுள்ளது. 1 அவுன்ஸ்(28g) $160(இந்திய மதிப்பில் ₹15,085) அதாவது 4% உயர்ந்து $4,580 ஆக உள்ளது. வெள்ளி விலையும் 1 அவுன்ஸ் $5 உயர்ந்து $74-க்கு விற்பனையாகிறது. நம்மூர் சந்தையில் நேற்று மாலை நேர வர்த்தகத்தில் <<19465733>>தங்கம் விலை சவரனுக்கு ₹2,000<<>> உயர்ந்த நிலையில், சர்வதேச சந்தையில் இதேநிலை நீடித்தால் கணிசமாக விலை உயர வாய்ப்புள்ளது.
News March 25, 2026
கனிமொழிக்கே கொடுக்கல, கம்யூனிஸ்டுக்கு எப்படி? சீமான்

கனிமொழிக்கு சீட் கொடுக்காதவர்கள் எப்படி கம்யூனிஸ்டுக்கு கொடுப்பார்கள் என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். கனிமொழி ஆளுமையுள்ள பெண் என்ற அவர், மாநில அரசியலுக்கு வரும்போது உதயநிதிக்கு இடையூறாக இருக்கும் என நினைப்பார்கள் என்றார். என்னதான் இருந்தாலும் கனிமொழி உடன்பிறந்தவர் இல்லை என நினைப்பார்கள் எனவும் விமர்சித்துள்ளார். ஏற்கெனவே, தூத்துக்குடியில் போட்டியிட கனிமொழி விருப்பம் தெரிவித்ததாக பேசப்பட்டது.


