News August 16, 2025
இல.கணேசன் உடலுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி

மறைந்த நாகலாந்து கவர்னரும், மூத்த அரசியல் தலைவருமான இல.கணேசன் உடலுக்கு முதல்வர் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதன்பின் அவரின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய அவர், அங்கிருந்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உள்ளிட்டோரிடம் துக்கம் விசாரித்தார். அவரை தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் நேரு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
Similar News
News March 6, 2026
மீண்டும் போடியில் OPS போட்டியா?

தேனி போடிநாயக்கனூரில் OPS போட்டியிட, மகன் ரவீந்திரநாத் விருப்ப மனு பெற்றார். அத்துடன் போடி, கம்பம் (அ) ஆண்டிபட்டியில் தான் போட்டியிடவும் அவர் விருப்பமனு பெற்றுள்ளார். 2021-ல் தேனியில் 3 தொகுதிகளில் திமுக வென்றபோதும், போடியில் OPS வென்றார். தன்னுடைய சமூக மக்கள், உறவினர் அதிகமிருக்கும் பகுதி என்பதால், இம்முறை திமுக சார்பாக போட்டியிட்டாலும் OPS வெற்றிபெற அதிக வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.
News March 6, 2026
42 பற்களை கொண்ட மனிதன்.. கின்னஸ் உலக சாதனை!

32 பற்களை கொண்டவன் மனிதன் என்றால், இவர் ஒரு அசாத்திய மனிதனே. மலேசியாவை சேர்ந்த பிரதாப் முனியாண்டி(33) என்பவருக்கு மொத்தமாக 42 பற்கள் உள்ளதாம். மேல் வரிசையில் 20 பற்களும், கீழ் வரிசையில் 22 பற்களும் உள்ளதாம். இவரின் அதிசயத்தை ‘அதிக பற்களை கொண்ட நபர்’ என கின்னஸும் அங்கீகரித்துள்ளது. அவரின் போட்டோக்களும் வைரலாகி இருக்கும் நிலையில், மக்களும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.
News March 6, 2026
TN-ல் சினிமா ஒரு மதம் போல மாறிவிட்டது: சீமான்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா என கேட்கும் அளவுக்கு சாதாரணமாக யாரையும் கொலை செய்யும் அவல நிலை இருப்பதாக சீமான் விமர்சித்துள்ளார். நல்லாட்சி என்பது சொல்லில்தான் உள்ளது, செயலில் இல்லை என்ற அவர், மாநில உரிமையை பறிகொடுத்தவர்களே, மாநில உரிமை பற்றி பேசுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் சினிமா என்பது மதம் போல ஆகிவிட்டதாகவும் அவர் பேசியுள்ளார்.


