News June 14, 2024
ஸ்மார்ட் வகுப்பறைகளை தொடங்கி வைத்தார் முதல்வர்

அரசுப் பள்ளிகளில் 22,931 ஸ்மார்ட் வகுப்பறைகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற விழாவில், பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1,761 அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கிய அவர், தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினியையும் வழங்கினார். அத்துடன், தமிழ் பாடத்தில் 100/100 மதிப்பெண் பெற்ற மாணவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
Similar News
News September 6, 2025
பெரம்பலூர்: கோழிப்பண்ணை அமைக்க 50% மானியம்

பெரம்பலூர், நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் இலவச கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 % மானியம் வழங்கப்படுகிறது. இதனை அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பித்து பெறலாம். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News September 6, 2025
முடி கருகருன்னு அடர்த்தியா வளர இந்த எண்ணெய் போதும்

நோயில்லாத வாழ்க்கைக்கு தினமும் முருங்கையை உணவில் சேர்க்க வேண்டும் என சொல்வர். இத்தனை சிறப்பு மிக்க முருங்கையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய், முடி உதிர்வுக்கும் அருமருந்தாகிறதாம். முருங்கை விதைகளை காயவைத்து பொடியாக்கி, தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி, எடுத்துக்கொள்ளுங்கள். வாரத்திற்கு 2 முறை இந்த எண்ணெயை தலையில் தேய்த்துவர முடி உதிர்வு குறையுமாம். SHARE.
News September 6, 2025
PAK உடனான போட்டியை புறக்கணிக்காதது ஏன்?

ஆசிய கோப்பையில் PAK உடனான போட்டியை இந்தியா புறக்கணிக்காதது குறித்து BCCI மவுனம் கலைத்துள்ளது. மத்திய அரசு வகுத்துள்ள கொள்கைகளின் படி சர்வதேச, பல தரப்பு போட்டிகளில் மட்டுமே IND அணி விளையாடுவதாகவும், PAK உடனான இருதரப்பு போட்டிகளில் விளையாடாது என்றும் விளக்கம் அளித்துள்ளது. மேலும், சர்வதேச போட்டிகளில் விளையாடாவிட்டால், இந்தியா மீது தடை விதிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.