News February 26, 2025
முதல்வர் அரசியல் செய்கிறார்: அண்ணாமலை

மும்மொழிக் கொள்கையில் தோல்வி அடைந்த காரணத்தினால், தொகுதி மறுசீரமைப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசுவதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். தொகுதி மறுசீரமைப்பு நடக்கும் என மத்திய அரசு எங்கும் சொல்லவில்லை என்றும், அதற்கு முன் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார். இல்லாத ஒன்றை முதல்வர் பேசுவதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.
Similar News
News March 30, 2026
அண்ணாமலை விலகலா? பாஜக புறக்கணிப்பா?

அண்ணாமலை, தேர்தலில் போட்டியிடவில்லை என தலைமைக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனால், அவர் பாஜகவை புறக்கணித்து வருவதாக பேச்சு எழுந்தது. நேற்று, கோவையில் PM மோடி வரவேற்பு நிகழ்விலும் அவர் பங்கேற்கவில்லை. இது தொடர்பாக பேசிய வானதி, பட்டியலில் அண்ணாமலை பெயர் இருந்ததாக கூறினார். ஆனால், வரவேற்பாளர்கள் பட்டியலில் அண்ணாமலை பெயரை சேர்க்காமல் பாஜக புறக்கணித்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
News March 30, 2026
CSK பிளேயிங் XI: முதல்முறை மஞ்சள் ஜெர்சியில் 5 பேர்?

2026-ம் ஆண்டு சீசனில் CSK அணி இன்று தனது முதல் ஆட்டத்தில் RR-ஐ எதிர்கொள்கிறது. பிளேயிங் XI-ல் கிட்டத்தட்ட 5 புதுமுகங்கள் அறிமுகமாவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. சஞ்சு சாம்சன், பிரஷாந்த் வீர், மெட் ஹென்றி ஆகியோர் கண்டிப்பாக விளையாடுவார்கள். அதே நேரத்தில் கார்த்தி ஷர்மா & மேத்யூ ஷார்ட் ஆகியோர் விளையாடலாம் என கூறப்படுகிறது. 5 முறை சாம்பியன் அணியின் Legacy-யை இவர்கள் முன்னெடுத்து செல்வார்களா?
News March 30, 2026
EXCLUSIVE: திலகபாமாவுக்கு தோல்வியடையும் தொகுதியா?

பெரம்பூரில் மற்றவர்களை விட தன்னால் சிறப்பாக செயல்பட முடியும் என Way2News-க்கு திலகபாமா பேட்டியளித்துள்ளார். விஜய் போட்டியிடும் தொகுதி என்பதால் வேண்டுமென்ற பாமக அவரை அங்கு நிற்கவைத்ததா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அனைத்து தொகுதிகளிலும் வெற்றியடையும் ஆள்களையே பாமக தேர்வு செய்யும் எனவும், தன்னை நம்பியே இத்தொகுதியை கொடுத்துள்ளதாகவும் கூறினார். ஏப்.2-ல் இவர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.


