News March 29, 2025

இரா.சுப்புராம் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

image

மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசனின் தந்தை <<15911227>>இரா.சுப்புராம்<<>> மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இரா.சுப்புராம் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்தியதாக குறிப்பிட்டுள்ள அவர், ஆளாக்கிய தந்தையை இழந்து வாடும் சு.வெங்கடேசன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்வதாகவும் தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 31, 2025

நாய்க்கடிக்கு சிறுவன் பலி

image

சேலத்தில் தெரு நாய் கடித்ததில் 9 வயது சிறுவன் கிஷோர் பரிதாபமாக உயிரிழந்தார். ஒரு வாரத்திற்கு முன்பு சிறுவனை தெரு நாய் ஒன்று கடித்துள்ளது. அதனை அவர் வீட்டில் சொல்லாமல் மறைத்திருக்கிறார். திடீரென நேற்று சிறுவனின் உடல்நலன் குன்றவே, பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். ஆனால், சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News March 31, 2025

டெல்லி பயணம்… செங்கோட்டையன் பதில் இதோ!

image

‘டெல்லி சென்றீர்களா?, தொடர் மௌனத்திற்கு காரணம் என்ன?’ என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, மௌனம் அனைத்தும் நன்மைக்கே என செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். இபிஎஸ் உள்ளிட்ட அதிமுக மூத்த தலைவர்கள் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த நிலையில், செங்கோட்டையன் தனியாக டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில்தான், ஒற்றை வரியில் அவர் பதிலளித்துவிட்டு சென்றுள்ளார்.

News March 31, 2025

உடற்சூடு தணிக்கும் கற்றாழை

image

கற்றாழை ஜூஸ் குடித்தால் பின்வரும் பலன்கள் கிடைக்கும்: * உடல் வெப்பத்தைத் தணியும் *நீர்க்கடுப்பு, நீர்தாரை எரிச்சல் நீங்கும் *மாதவிடாய் கோளாறுகள், உடல் வெப்பம், உடல் காந்தல் போன்ற பாதிப்புகள் குறைய உதவும் *கண்களில் எரிச்சலைப் போக்கும் *வயிற்றுப்புண் ஆற உதவும், வயிற்றின் எரிச்சலை சரிசெய்யும். *வெயிலில் இருந்தும் மூல நோயில் இருந்தும் நம்மைக் காக்கும் *மலச்சிக்கல் நீங்க உதவும்.

error: Content is protected !!