News January 2, 2025
மௌன சாமியாராக முதல்வர்: இபிஎஸ் சாடல்

தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் தொடர்வதாக இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றத்தை சுட்டிக்காட்டும் அதிமுகவிற்கு பதிலளிப்பதை விடுத்து, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், குற்றவாளிகளை திமுக காப்பாற்ற முயல்வதாக சாடியுள்ள அவர், காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் மௌன சாமியாராக இருப்பதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 1, 2025
2025 கூட்ட நெரிசல் மரணங்கள்!

ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் காசிபக்கா வெங்கடேஸ்வரர் கோயில் கூட்ட நெரிசல் சம்பவத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். செப்டம்பர் மாதம் கரூரில் பெரும் துயரம் ஏற்பட்டது. இதேபோன்று 2025-ம் ஆண்டில் இந்தியாவில், இதுவரை பல்வேறு பொது இடங்களில் கூட்ட நெரிசலால் ஏராளமான துயரமான சம்பங்கள் நிகழ்ந்துள்ளன. அவை என்ன நிகழ்வுகள் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக பாருங்க.
News November 1, 2025
அக்டோபர் GST வசூல் ₹1.95 லட்சம் கோடி

அக்டோபர் மாத GST வசூல் ₹1.95 லட்சம் கோடியாக உள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த செப்டம்பர் மாத வசூலான ₹1.89 லட்சத்தை விட 4.6% அதிகமாகும். அதேபோல், 2024 அக்டோபர் வசூலை விட 9% அதிகமாகும். தொடர்ச்சியாக கடந்த 10 மாதங்களாக GST வசூல் ₹1.8 லட்சம் கோடியை தாண்டி வருவதாகவும் நிதியமைச்சகம் கூறியுள்ளது. GST 2.0 காரணமாக எலெக்ட்ரிக் சாதனங்கள் விற்பனை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News November 1, 2025
சித்தராமையாவை ஏன் காங்கிரஸ் மாற்றாது? (1/2)

கர்நாடகாவில் இந்த முறையும் CM பதவியில் அமர DK சிவகுமாருக்கு வாய்ப்பில்லை. காங்., தலைமையே விரும்பினாலும் அது நடக்காது என்கின்றனர். சித்தராமையாவின் AHINDA(சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்) ஃபார்முலாவே இதற்கு காரணம். ஒக்கலிகர் சமூகத்தை சேர்ந்த DKS–ஐ CM ஆக்கினால், AHINDA வாக்குவங்கி கைவிட்டு போய்விடுமென காங்., அஞ்சுகிறது. <<18168420>>அடுத்த செய்தியில் விவரம் அறிக.<<>>


