News April 22, 2025
அமைச்சர் PTR-க்கு அறிவுரை வழங்கிய முதல்வர்

சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில், அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜனுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினார். அமைச்சர் PTR அறிவார்ந்த வாதங்களை வைக்கக் கூடியவர் என்றும் அவரது சொல்லாற்றல் அவருக்கு பலமாக இருக்க வேண்டுமே தவிர பலவீனமாகி விடக்கூடாது என்றும் முதல்வர் பேசினார். இதை நான் ஏன் சொல்கிறேன் என்று அவருக்கு தெரியும் என்றும் முதல்வர் அழுத்தமாக குறிப்பிட்டார்.
Similar News
News November 21, 2025
திமுக வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை: நயினார்

தென்காசியில் சட்டக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி கொண்டு வருவோம் என சொன்ன திமுக, அதை நிறைவேற்றவில்லை என நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் நான்கரை ஆண்டுகால ஆட்சியில் இதுவரை ஒரு மருத்துவக் கல்லூரியை கூட தமிழ்நாட்டுக்கு திமுக கொண்டு வரவில்லை என்றும், அதிமுக ஆட்சியில் 11 கல்லூரிகள் கொண்டுவரப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். திமுக ஆட்சி மீது மக்கள் வெறுப்பாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
News November 21, 2025
ஜடேஜாவை CSK விட்டது ஆச்சரியமாக உள்ளது: கும்ளே

ஜடேஜா போன்று ஒரு நபரை CSK டிரேட் செய்தது ஆச்சரியம் அளிப்பதாக அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். வழக்கமாக சென்னை அணி இதுபோன்று செய்து பார்த்ததில்லை என தெரிவித்த அவர், அதை அவர்கள் செய்திருக்க கூடாது எனவும் கூறியுள்ளார். CSK , ராஜஸ்தானின் டிரேட் IPL-லில் முக்கியமானது என்றும், ஆனால் RR ஜடேஜாவுக்கு கேப்டன் பொறுப்பு கொடுக்குமா என்பது முக்கியமான கேள்வி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News November 21, 2025
வரலாற்றில் இன்று

1947 – இந்தியா விடுதலை அடைந்த பின்னர் முதன் முறையாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டது
1963 – இந்தியாவின் முதலாவது ஈரடுக்கு உளவு ஏவுகணை நைக்-அப்பாச்சி ஏவப்பட்டது.
1991 – சுதந்திர போராட்ட வீரர் தி. சு.அவிநாசிலிங்கம் மறைந்தார்.
2022 – தமிழறிஞர் ஔவை நடராசன் மறைந்த தினம்.


