News October 24, 2024
தலைமைக்கு வராமலே தலைமை நீதிபதியான சஞ்சீவ்

கடந்த 1960இல் ஆண்டு டெல்லியில் பிறந்த சஞ்சீவ் கண்ணா, டெல்லி பல்கலை.,யில் சட்டம் பயின்றவர். 1983இல் டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து அவர், 2005இல் டெல்லி ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதியாகவும், 2019இல் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். எந்த ஒரு நீதிமன்றத்திலும் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகிக்காமல், சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார.
Similar News
News January 15, 2026
நிலவில் சொகுசு ஹோட்டல்!

அமெரிக்காவை சேர்ந்த GRU Space நிறுவனம், நிலவில் முதல் சொகுசு ஹோட்டலை அமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் கட்டுமானத்தை 2029-ல் தொடங்கி, 2032-க்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்த ஹோட்டலில் ஒருவர் தங்குவதற்கு (5 நாள்கள்) சுமார் ₹90 கோடி செலவாகும் என கூறப்படுகிறது. இதற்கான முன்பதிவுகளையும் அந்நிறுவனம் இப்போதே தொடங்கியுள்ளது. நிலவில் தங்குனா எப்படி இருக்கும்?
News January 15, 2026
கொழுப்பு கல்லீரல் நோய் பாதிப்பில் டாப் 3-ல் இந்தியா!

கொழுப்பு கல்லீரல் நோய் (FATTY LIVER) பாதிப்பில் உலகளவில் இந்தியா 3-வது இடம் பிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுப்பழக்கத்தை தாண்டி இப்போது உடல் பருமனும், நீரழிவும் இந்நோய்க்கு முக்கிய காரணம் என்றும், நாட்டின் கல்லீரல் கேன்சர் பாதிப்பில் 40% வரை இந்நோயுடன் தொடர்பு உள்ளது என்றும் டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இதனை தடுக்க வாரத்திற்கு 150 Mins உடற்பயிற்சியும், உணவு கட்டுப்பாடும் அவசியம்.
News January 15, 2026
தமிழ் காமெடி நடிகர் மரணம்.. மகள் உருக்கம்

மறைந்த காமெடி நடிகர் ரோபோ சங்கரின் 47-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது மகள் SM-ல் உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார். முதல் முறையாக உங்க பிறந்தநாளுக்கு நீங்க இல்லாம இருக்கோம் அப்பா; எல்லாரும் வெயிட் பண்றோம் என அவர் வருந்தியுள்ளார். உன் சிரிப்பில்லாத வீடு வெறுமையாகவும், உன் குரல் இல்லாத நாள்கள் எல்லாமே கனமாவும் இருக்கிறது அப்பா என பதிவிட்டு தனது ஏக்கத்தை இந்திரஜா சங்கர் வெளிப்படுத்தியுள்ளார்.


