News April 29, 2025
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக கவாய்-ஐ நியமனம் செய்து குடியரசுத் தலைவர் முர்மு உத்தரவிட்டுள்ளார். தற்போது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா மே 13 அன்றுடன் ஓய்வு பெற உள்ளார். இதனையடுத்து, புதிதாக நியமிக்கப்பட்ட பி.ஆர். கவாய் மே 14-ம் தேதி தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொள்கிறார். அடுத்த ஆறு மாதங்கள் மட்டுமே தலைமை நீதிபதியாக இருக்கப்போகும் அவர், நவ., மாதம் ஓய்வு பெறுவார் என தெரிகிறது.
Similar News
News November 23, 2025
சட்டென காணாமல் போன நடிகைகள்

மறக்க முடியாத கதாபாத்திரத்தில் நடித்து, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த சில நடிகைகள், திடீரென சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டனர். பலரும் ஒன்று அல்லது இரண்டு படங்களுடன் தமிழ் சினிமாவை விட்டு மறைந்தனர். அவர்களில் சில மறக்கமுடியாத நடிகைகளை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், உங்களால் மறக்க முடியாத நடிகை யார்? SHARE
News November 23, 2025
NDA கூட்டணியில் மீண்டும் இணைவேன்: OPS

2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் NDA கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாக OPS தெரிவித்துள்ளார். செங்கோட்டையன், தினகரனுடன் சந்திப்பு தொடர்ந்து நடந்து வருவதாக கூறிய அவர், அதிமுகவில் பிரிந்தவர்களை இணைப்பதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். <<18363937>>தினகரன்- அண்ணாமலை<<>> சந்திப்பு நல்லதற்கே என்றும் அவர் கூறியுள்ளார்.
News November 23, 2025
நாளை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர்கள் அறிவிப்பு

புயல் அலர்ட்டால், தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், முதல்கட்டமாக தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் நாளை(நவ.24) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவிட்டுள்ளன. தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் தொடர் கனமழை பெய்து வருவதால் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. SHARE IT.


