News April 13, 2025
சிக்கன் விலை கிடுகிடு உயர்வு!

சிக்கன் விலை இன்று(ஏப்.13) சற்று உயர்ந்துள்ளது. நாமக்கல் மொத்த சந்தையில் முட்டை ₹4.15க்கும், முட்டைக் கோழி ₹85க்கும் விற்பனையாகிறது. அதேவேளையில் கறிக்கோழி ₹7 உயர்ந்து ₹96ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தின் பிற பகுதிகளில் சில்லறை விலையில் தோல் நீக்கிய கோழிக்கறி கிலோ ₹200 – ₹240 வரையிலும், தோலுடன் கூடிய கோழிக்கறி ₹160 – ₹200 வரையிலும் விற்பனையாகிறது. உங்கள் ஊரில் ஒரு கிலோ எவ்வளவு?
Similar News
News April 14, 2025
பாமகவில் வெடித்த மோதல்

பாமகவில் அன்புமணிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்த பொருளாளர் திலகபாமாவுக்கு எதிராக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், திலகபாமா கட்சிக்கு நேற்று வந்தவர் என்றும், கட்சியில் கொள்கை கோட்பாடுகள் குறித்து ஏதும் அறியாதவர் என்றும் விமர்சித்துள்ளார். அரசியல் என்றால் என்னவென்றே தெரியாத அரைவேக்காடு திலகபாமா என்றும் அவர் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.
News April 14, 2025
இரு துருவமாக பிரியும் பாமக நிர்வாகிகள்

பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையே ஏற்பட்டிருக்கும் மோதலால், நிர்வாகிகள் இரு அணியாக பிரியத் தொடங்கியுள்ளனர். அதன் உச்சமாக, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. அன்புமணிக்கு ஆதரவாக திலகபாமா கருத்து தெரிவித்திருந்த நிலையில், அவர் கட்சியில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தி வடிவேல் ராவணன் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளார்.
News April 14, 2025
தமிழகத்தை சேர்ந்த 4 பேருக்கு மத்திய அமைச்சர் பதவி?

பிஹார் தேர்தலுக்கு முன்பு மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படலாம் என்றும், அப்பாேது பிஹார் மாநிலத்தை சேர்ந்த சிலருக்கு மத்திய அமைச்சரவையில் இடமளிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. அதேபோல், 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்து, அண்ணாமலை, அன்புமணி, சி.வி. சண்முகம், ஜி.கே. வாசன் ஆகியோருக்கும் மத்திய அமைச்சரவையில் இடமளிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.