News March 23, 2025
சிக்கன் விலை குறைந்தது

வார விடுமுறை நாளான இன்று (ஞாயிறு) சிக்கன் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது. கொள்முதல் பண்ணைகளில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ₹104க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று ₹8 குறைந்து ₹96க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக, மாநிலம் முழுவதும் சிக்கன் விலை குறையும் என கூறப்படுகிறது. மேலும், முட்டை கொள்முதல் விலை 415 காசுகளாகவும், முட்டைக்கோழி விலை கிலோ ₹70 ஆகவும் நீடிக்கிறது.
Similar News
News July 11, 2025
சித்தியை கொடூரமாக வெட்டி கொலை

காஞ்சிபுரம் மாவட்டம் வையாவூர் அடுத்த நல்லூரில் சமாதானம் செய்வதற்காக சென்ற சித்தியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் மாவட்டத்தையே உலுக்கியுள்ளது. அண்ணன் – தம்பி இடையிலான இடப்பிரச்சனையில், சித்தி சுமதி சமாதானம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த மகன் உறவு கொண்ட துரை என்பவர் சுமதியின் தலையில் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News July 11, 2025
பெங்களூருவில் தெருநாய்களுக்கு சிக்கன் ரைஸ்

பெங்களூருவில் கடந்த 6 மாதங்களில் 7000 பேரை தெருநாய்கள் கடித்துள்ளதாம். போதிய ஊட்டசத்து கிடைக்காததால் தான் நாய்கள் இவ்வாறு தாக்குவதாகவும், ஆகையால் அவற்றுக்கு சிக்கன் ரைஸ் வழங்க மாநகராட்சி நிர்வாகம் முடிவுசெய்துள்ளது. இதற்காக ஆண்டுக்கு ₹2.88 கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளதாம். இத்திட்டம் மூலம் தினமும் 5000 நாய்கள் பயனடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News July 11, 2025
₹36,900 சம்பளத்தில் அரசு பள்ளிகளில் 1,996 காலியிடங்கள்

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர், கணினி பயிற்றுநர், உடற்கல்வி இயக்குநர் உள்ளிட்ட 1,996 காலியிடங்களை நிரப்ப தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. B.Ed, B.Sc.Ed படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வின் மூலம் தேர்ச்சி நடைபெறும் (இதில் தமிழ் கட்டாயம்). ₹36,900- ₹1,16,600 வரை சம்பளம் வழங்கப்படும். முழு தகவலுக்கு <