News April 11, 2025

வந்தாச்சு சிக்கன் டேஸ்டில் டூத் பேஸ்ட்..!

image

சிக்கன் பிரியர்களுக்கு தான் இது சூப்பர் நியூஸ். சிக்கன் டேஸ்டில் டூத் பேஸ்ட் ஒன்று அறிமுகமாகியுள்ளது. பிரபல KFC நிறுவனம், ஆஸ்திரேலியாவின் பல் மருத்துவ கம்பெனியுடன் சேர்ந்து, இந்த பேஸ்ட்டை உருவாக்கியுள்ளது. இதில், 11 மூலிகைகள் இருப்பதால், டேஸ்ட் மட்டுமின்றி, ஹெல்த்துக்கும் ரொம்ப நல்லது எனக் கூறுகிறார்கள். விற்பனைக்கு வந்த சில மணி நேரத்திலேயே இது விற்று தீர்ந்து விட்டது. யாராவது வாங்க போறீங்களா?

Similar News

News November 24, 2025

அயோத்தி ராமருக்காக விரதம் இருக்கும் PM மோடி

image

அயோத்தி ராமர் கோயிலில் 161 அடி உயர கொடி ஏற்றும் நிகழ்வு, நவ.25-ல் நடைபெறவுள்ளது. இதற்காக வருகை தரும் PM மோடி, அன்று காலை 11:50 மணிக்கு மேல் கொடியேற்றவுள்ளார். பின்னர், மகாதீபாராதனையில் பங்கேற்கும் அவர், சுவாமி தரிசனம் செய்வார். இவ்வாறு கொடி ஏற்றுகையில், மோடி விரதத்தில் இருப்பார் என ராமர் கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பின்னர், மனிதநேயம் பற்றி உரையாற்றுவாராம்.

News November 24, 2025

கபில் தேவ் பொன்மொழிகள்

image

* வெற்றி பெறுவதற்கான பசி இறக்கக்கூடாது. பசி பெரிதாக இருக்க வேண்டும்.
*நான் எதிர்மறையான விஷயங்களைப் பார்ப்பதில்லை. தவறுகளைத் தாண்டி முன்னோக்கிப் பாருங்கள்.
* நீங்கள் ஏதாவது செய்ய விரும்பினால், ஏதாவது சாதிக்க விரும்பினால், உங்களிடம் இல்லாததைப் பற்றி எப்போதும் யோசித்துக்கொண்டிருக்க முடியாது. * உங்களையும் உங்கள் திறன்களையும் நம்புங்கள். அதுதான் மகத்துவத்தை அடைவதற்கான முதல் படி.

News November 24, 2025

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் கொலை

image

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தலைவர் ஹைப்தம் டப்டாபை கொல்லப்பட்டுள்ளார். 12 வயதில் ஹிஸ்புல்லா அமைப்பில் சேர்ந்த ஹைப்தம், 2015-ல் அமைப்பின் முக்கிய நபராக கவனிக்கப்பட்டார். 2016-ல் அமெரிக்காவின் தேடப்படும் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார். மேலும் இந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

error: Content is protected !!