News May 26, 2024
கோழிக் கறி விலை உயர்ந்தது

கறிக்கோழி கிலோ ₹144க்கு (உயிருடன்) விற்பனையாகி வந்த நிலையில் இன்று ₹3 உயர்ந்து ₹147 என விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம், முட்டைக் கோழி கிலோ ₹103 என்ற விலையிலேயே நீடிக்கிறது. தேவை அதிகரித்திருப்பதால் கறிக்கோழியின் விலை உயர்ந்திருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர். பண்ணைக் கொள்முதல் விலையின்படி, கோழி முட்டை ₹5.80 என விற்பனை ஆகிறது.
Similar News
News November 24, 2025
சற்றுமுன்: புஸ்ஸி ஆனந்திடம் சிபிஐ விசாரணை

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ், நிர்மல் குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பரப்புரையின்போது விஜய் தாமதமாக வந்தாரா, பரப்புரை நடைபெற்ற இடத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டதா, சம்பவம் நடந்தபோது அங்கிருந்தது யார் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுடன் விசாரணை நடைபெற்று வருகிறது.
News November 24, 2025
இந்திய பெண் உளவாளியை கௌரவித்த ஃபிரான்ஸ்

2-ம் உலகப்போரின் போது, ஹிட்லர் படைகளுக்கு எதிராக உளவு பார்த்த, பிரிட்டிஷ் – இந்திய வம்சாவளி நூர் இனாயத் கானுக்கு தபால் தலை வெளியிட்டு ஃபிரான்ஸ் கவுரவித்துள்ளது. திப்பு சுல்தானின் வழித்தோன்றலான நூர் இனாயத் கான், ஃபிரான்ஸ் நினைவு அஞ்சல் தலையால் கௌரவிக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி பெண்மணி ஆவார். நாஜி ஆக்கிரமிப்பு ஃபிரான்ஸில் ஊடுருவி உளவு பார்த்ததாக 1944-ம் ஆண்டில் அவர் தூக்கிலிடப்பட்டார்.
News November 24, 2025
நேற்று தந்தை, இன்று காதலன்.. அடுத்தடுத்து வந்த சோதனை

ஆட்டம், பாட்டம் என இருந்த ஸ்மிருதி மந்தனாவின் திருமணம், அவரது தந்தைக்கு ஏற்பட்ட மாரடைப்பால் நின்றுபோனது. தந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சூழலில், இன்று அவரது காதலர் பலாஷுக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு ஹெவி ஃபீவர் ஏற்பட்டதால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், ஸ்மிருதியின் தந்தை விரைவில் டிஸ்சார்ஜ் ஆவார் எனவும் கூறப்பட்டுள்ளது.


