News March 24, 2025
மலையாளப் படத்தில் சேரன்.. காவல்துறை உடையில் அசத்தல்

ஆட்டோகிராப் தொடங்கி பல அருமையான படங்களை தமிழில் கொடுத்தவர் சேரன். அவர் தமிழ் சினிமாவில் இருந்து தற்போது மலையாளத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ளார். அனுராஜ் மனோகர் இயக்கும் நரிவேட்டை படத்தில் சேரன் தற்போது நடித்து வருகிறார். படத்தின் போஸ்டரை தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக டொவினோ தாமஸ் நடிக்கிறார்.
Similar News
News December 11, 2025
ரூமி பொன்மொழிகள்

*வருத்தப்படாதீர்கள். நீங்கள் இழக்கும் எதுவும் வேறொரு வடிவத்தில் திரும்ப வரும். *நீங்கள் எவ்வளவு அமைதியாகிறீர்களோ, உங்களால் அவ்வளவு அதிகமாகக் கேட்க முடியும். *உங்கள் இதயத்திற்கு வழி தெரியும். அந்தத் திசையில் ஓடுங்கள். *வாழ்க்கையின் நோக்கம் அன்பாக மாறும் போது அனைத்து சந்தேகங்கள், விரக்தி மற்றும் அச்சம் போன்றவை முக்கியமற்றதாகிவிடும். *நீங்கள் எதைத் தேடுகிறீர்களோ அது உங்களைத் தேடுகிறது.
News December 11, 2025
நீதிபதி சுவாமிநாதனுக்கு Z பாதுகாப்பு வழங்குக: கஸ்தூரி

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி G.R.சுவாமிநாதனை, தேசவிரோத சக்திகள் சமூக வலைதளங்களில் மிரட்டுவதாக கஸ்தூரி குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால் அவருக்கு மத்திய அரசு Z பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், திருப்பரங்குன்றத்தில் உள்ள இந்து, முஸ்லிம்களே ஒன்றும் சொல்லாத நிலையில், அரசியலுக்கு திமுக அரசு சர்ச்சையை எண்ணெய் ஊற்றி வளர்ப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
News December 11, 2025
தீயில் உடல் கருகும் போது தாய்லாந்துக்கு டிக்கெட்

<<18509384>>கோவா இரவு விடுதியில்<<>> 25 பேர் உடல் கருகி பலியாகிக் கொண்டிருந்த சமயத்தில், விடுதி உரிமையாளர்கள் தாய்லாந்துக்கு விமான டிக்கெட் புக் செய்தது தெரியவந்துள்ளது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடிய நள்ளிரவு 1:17 மணிக்கு டிக்கெட் புக் செய்து, அதிகாலை 5:30 மணிக்கு தாய்லாந்து தப்பி ஓடியுள்ளனர். அதேபோல், அவர்கள் பயன்படுத்தும் சிம் கார்டுகளும் வீட்டு வேலைக்காரருடையது என போலீசார் தெரிவித்துள்ளனர்.


