News March 27, 2025
RCB-க்கு 17 ஆண்டுகளாக தண்ணி காட்டும் சேப்பாக்கம்…!

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணியை ஆர்சிபி வீழ்த்தியபோது, விராட் கோலி சர்வதேச போட்டிகளில் விளையாடியதில்லை. தோனி கேப்டனாக 16 சர்வதேச போட்டிகளில் மட்டுமே வென்றிருந்தார். அப்போது, ஓய்வு பெறாமல் இருந்த சச்சின் 81 சதங்கள் மட்டுமே அடித்திருந்தார். ஆம், 2008 மே 21-ம் தேதிக்கு பிறகு சிஎஸ்கே அணியை சேப்பாக்கத்தில் ஆர்சிபி வென்றதே இல்லை. நாளைய நாள் எப்படி அமையும்? உங்கள் கருத்து என்ன?
Similar News
News December 6, 2025
கிருஷ்ணகிரி: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) சென்னை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். *உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க*
News December 6, 2025
‘ஹாப்பி ராஜ்’ ஆக மாறிய ஜி.வி.பிரகாஷ்குமார்!

ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘ஹாப்பி ராஜ்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் மரியா இளஞ்செழியன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில், நீண்ட இடைவெளிக்கு பின் நடிகர் அப்பாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் நிலையில், படக்குழு போஸ்டர்களை வெளியிட்டு, படத்தின் பெயரை அறிவித்துள்ளது.
News December 6, 2025
தி.குன்றம் அயோத்தியாக மாறுவதில் தவறில்லை: BJP

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதில் மதக் கலவரம் ஏற்படவில்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் அயோத்தியாக மாறுவதில் தவறில்லை என்ற அவர், இந்தியாவில் தானே அயோத்தி உள்ளது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். NDA கூட்டணியின் ஆட்சி ராமரின் ஆட்சியாகவே இருக்கும் என தெரிவித்த நயினார், சனாதன தர்மத்தை அழிப்பதற்கான ஆரம்பகட்ட பணிகளில் ஈடுபடுகிறீர்களா என திமுகவை சாடியுள்ளார்.


