News March 20, 2025

ஆண்டுதோறும் உயரும் சென்னையின் கடல் மட்டம்

image

1993 முதல் 2020 வரை சென்னை பகுதியில் கடல் மட்டம், ஆண்டுக்கு 4.31 மில்லி மீட்டர் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. காலநிலை மாற்றம் தொடர்பாக மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு இந்த தகவலை பதிலாக அளித்துள்ளது. இதே காலகட்டத்தில் மும்பையில் 4.59 மி.மீ., கொச்சியில் 4.10 மி.மீ., பாராதீப்-ல் 4.43 மி.மீ., அளவுக்கு கடல் மட்டம் உயர்ந்துள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.

Similar News

News March 20, 2025

கடைசி ‘லெஜெண்ட்’ வீரர் காலமானார்

image

2-ம் உலகப் போரின் மகத்தான விமானப்படை வீரன் என்ற புகழ்பெற்ற ஜான் பேடி ஹெமிங்வே, தனது 105-வது வயதில் காலமானார். 1941-ல் ஹிட்லரின் படை பிரிட்டன் மீது பெருந்தாக்குதல் நடத்திய போது, பிரிட்டனின் விமானப்படையே (RAF) அதை தடுத்து நிறுத்தியது. அதில் முக்கிய பங்காற்றியவர் ஜான் பேடி. தொடர்ந்து பல போர்முனைகளில் இவர் பங்காற்றியுள்ளார், பலமுறை இவரது விமானம் சுடப்பட்டும் தப்பிப் பிழைத்துள்ளார்.

News March 20, 2025

பெரியார் விருதை திருப்பி அளிக்கும் சினிமா இயக்குநர்

image

தமிழ்நாட்டில் ஒரு தலித், அரசியல் கேள்விகளை எழுப்புவது பெரியாரிய, திராவிட சித்தாந்தவாதிகளுக்கு கோபத்தை எழுப்புவதாக அறம் பட இயக்குநர் கோபி நயினார் குற்றஞ்சாட்டியுள்ளார். ‘அறம்’ கதைக்கு விருது வழங்கிய தி.க., அதனை நிஜ வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தும்போது தன்னை எதிரியாக சித்தரிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார். தி.க. வழங்கிய பெரியார் விருதை திருப்பி அளிப்பதாகவும் கோபி நயினார் குறிப்பிட்டுள்ளார்.

News March 20, 2025

கோரிக்கையை கவனியுங்கள்… ஆடைகளை அல்ல: கனிமொழி

image

எதிர்க்கட்சிகள் இல்லாமல் நாடாளுமன்றத்தை நடத்த பாஜக அரசு விரும்புவதாக கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார். தங்களது மாநில உரிமையை வலியுறுத்தும் ஆடைகளை அணிந்து செல்ல எம்.பி.க்களை சபாநாயகர் அனுமதிக்கவில்லை எனவும், வேறு ஆடைகளை அணிந்து வாருங்கள் என்று கூறுவதை ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, தொகுதி மறுவரை தொடர்பான வாசகங்கள் அடங்கிய டீ-சர்ட்டுகளை எம்.பி.க்கள் அணிந்து சென்றிருந்தனர்.

error: Content is protected !!