News April 9, 2025

கான்வேயை வெளியேற்றிய சென்னை

image

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னையின் தொடக்க வீரர் கான்வே ரிட்டயர்ட் அவுட் மூலம் வெளியேறினார். 69 ரன்கள் எடுத்த அவருக்கு இறுதி நேரத்தில் அதிரடியாக விளையாட முடியவில்லை. ஆகையால், ரிட்டயர்ட் அவுட் மூலம் தானாக வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ஜடேஜா களத்திற்கு வந்து தோனியுடன் இணைந்திருக்கிறார்.

Similar News

News April 17, 2025

காதலில் விழுந்த ஸ்ரீதேவியின் மகள்..!

image

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர், நடிகர் வேதாங் ரெய்னாவுடன் காதலில் இருப்பதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. ‘ஆர்ச்சிஸ்’ படத்தில் நடித்தபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த ஜோடி டேட்டிங்கில் இருப்பதாக செய்திகள் உலா வந்தன. அதனை சிம்பாலிக்காக குஷி கபூர் உறுதி செய்துள்ளார். V, K ஆகிய எழுத்துகள் அடங்கிய செயின் அணிந்திருக்கும் அவரது ஸ்டில்ஸ் வைரலாகி வருகின்றன.

News April 17, 2025

கொளுத்தும் வெயில்.. அம்மை நோய் வராமல் தடுப்பது எப்படி?

image

உடல் சூட்டை தணிப்பது அம்மை நோயை வராமல் தடுக்கும் *வாரம் 3 நாள்கள் தலைக்குக் குளிக்கலாம் *வெறும் தண்ணீர் குடிக்காமல், எலுமிச்சை சாறு, நன்னாரி போன்றவற்றைச் சேர்க்கலாம் *தாழம்பூவுக்கு அம்மையைத் தடுக்கும் குணம் உண்டு. டாக்டர்களின் ஆலோசனையோடு தாழம்பூ மணப்பாகு எடுத்துக்கொள்ளலாம். குளிக்கும் நீரில் வேப்பிலையும் மஞ்சளும் சேர்த்து குளிக்கலாம் *இளநீர், கரும்பு ஜூஸ், பனஞ்சாறு குடிக்கலாம். SHARE IT.

News April 17, 2025

பெண்களுக்கு மானிய விலையில் கிரைண்டர்: TN அரசு

image

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 2,000 பேருக்கு உலர், ஈரமாவு அரைக்கும் கிரைண்டர் வாங்க ₹1 கோடி மானியம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ₹10,000 (அ) அதற்கு மேல் மதிப்பிலான கிரைண்டர் வாங்கும்போது, மொத்த விலையில் 50% (அ) அதிகபட்சமாக ₹5000 மானியம் கிடைக்கும். இத்திட்டத்தில் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாக மினிஸ்டர் கீதாஜீவன் கூறினார்.

error: Content is protected !!