News April 19, 2024
தமிழகத்தில் கடைசி 3 இடத்தை பிடித்த சென்னை

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சென்னையில் மட்டும் வாக்குப்பதிவு மந்தமாக நடந்து வருகிறது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதத்தில் தமிழகத்திலேயே கடைசி 3 இடங்களை சென்னை தொகுதிகள் பிடித்துள்ளன. மத்திய சென்னை 32.31%, தென்சென்னை 33.93%, வட சென்னை 35.09% வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக தருமபுரியில் 44.08% வாக்குகள் பதிவாகியுள்ளன.
Similar News
News May 7, 2025
ஆற்றில் மூழ்கி 6 பேர் மரணம்.. சோகத்தில் முடிந்த விடுமுறை

குஜராத் மேஷ்வோ ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விடுமுறையை கழிக்க உறவினர் வீட்டிற்குச் சென்ற அவர்கள், அங்குள்ள ஆற்றில் குளித்துள்ளனர். அப்போது, ஆழம் தெரியாமல் ஒவ்வொருவராக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இறந்தவர்கள் அனைவரும் 14 – 21 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் இதுகுறித்து விசாரித்து வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News May 7, 2025
24 கேரட் தங்கம் விலை ₹1,792 குறைந்தது

சென்னையில் 24 கேரட் சுத்த தங்கத்தின் விலை இன்று (மே 1) ₹1,792 குறைந்துள்ளது. இதனால் நேற்று ₹9,796-க்கு விற்பனையான 1 கிராம் இன்று ₹9,572-க்கும், ₹78,368-க்கு விற்பனையான 8 கிராம் ₹76,576-க்கும் விற்பனையாகிறது. நேற்று அட்சய திருதியை நாளில் தங்கம் விலை மாற்றமின்றி விற்பனையான நிலையில், இன்று திடீர் சரிவைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News May 7, 2025
சாதனையின் விளிம்பில் ரோஹித்?

ரோஹித் இன்னும் 3 சிக்ஸர்களை விளாசினால், IPL-ல் 300 சிக்ஸர்களை அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைப்பார். இச்சாதனையை, இன்று RR-க்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா, நிகழ்த்துவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இதுவரை ரோஹித், IPL-ல் 226 மேட்சுகளில் விளையாடி, 297 சிக்ஸர்களும், 617 பவுண்டரிகளையும் விளாசி இருக்கிறார். இன்று சாதிப்பாரா ரோஹித்?