News February 28, 2025
திக்கு முக்காடும் சென்னை

சீமான் இன்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகவுள்ள நிலையில், அங்கு நாம் தமிழர் கட்சியினர் கூடியுள்ளனர். மேலும் பலர் வந்து கொண்டே இருப்பதால், அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க, சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு காவலுக்கு குவிக்கப்பட்டுள்ளனர். இரவு 8 மணிக்கு சீமான் ஆஜராகவுள்ள நிலையில், கட்சியினரின் எண்ணிக்கை அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News March 1, 2025
ராசி பலன்கள் (01.03.2025)

மேஷம் -கீர்த்தி, ரிஷபம் – உழைப்பு, மிதுனம் – மேன்மை, கடகம் – சாதனை, சிம்மம் – நட்பு, கன்னி – சாந்தம், துலாம் – நேர்மை, விருச்சிகம் – சிந்தனை, தனுசு – பாராட்டு, மகரம் – புகழ், கும்பம் – ஜெயம், மீனம் – சோர்வு.
News March 1, 2025
அரிசி விலை மூட்டைக்கு ரூ.100 குறைந்தது

அரிசி விலை கிலோவுக்கு ரூ.2 குறைக்கப்படுவதாக அரிசி ஆலை உரிமையாளர்கள், வணிகர்கள் சங்கத்தினர் நேற்று அறிவித்து இருந்தனர். இதையடுத்து 25 கிலோ மூட்டை அரிசி ரூ.50 குறைக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், இன்று மூட்டைக்கு ரூ.100 குறைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ.1,250க்கு விற்கப்பட்ட 25 கிலோ மூட்டை அரிசி ரூ.1,150ஆக குறைந்து இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
News March 1, 2025
வரும் 2ம் தேதி முதல் ரமலான் நோன்பு!

ரமலான் மாதத்திற்கான பிறை இன்று தென்படாததால், வரும் ஞாயிறு (மார்ச் 2) முதல் ரமலான் நோன்பு தொடங்குவதாக தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக ரமலான் இருந்து வருகிறது. புனித நூலான குர்ஆன் இந்த மாதத்தில் தான் அருளப்பட்டது என்பதால், இஸ்லாமியர்கள் இம்மாதத்தை புனித மாதமாக கருதி, மாதம் முழுவதும் நோன்பு இருந்து 30வது நாளில் ரமலான் பண்டிகையாக கொண்டாடுவார்கள்.