News January 19, 2025

திக்கு முக்காடும் சென்னை

image

விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்றவர்கள் சென்னை திரும்பி வருவதால் நகரமே திக்குமுக்காடி வருகிறது. 6 நாள்கள் தொடர் விடுமுறை என்பதால் லட்சக்கணக்கானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். அவர்கள் ஒரே நேரத்தில் சென்னை திரும்புவதால் பெருங்களத்தூர், தாம்பரம், கிளாம்பாக்கம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. GST சாலை வாகன நெருக்கடியில் சிக்கியுள்ளது.

Similar News

News April 3, 2026

காங்., 2-ம் கட்ட தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள்

image

நாங்குநேரி – ரூபி மனோகரன், குளச்சல்- தாரகை கத்பர்ட், விளவங்கோடு – டி.டி.பிரவீன், ஈரோடு கிழக்கு – கோபிநாத் பழனியப்பன், உதகை – ராமச்சந்திரன், கவுண்டம்பாளையம் – சூரியபிரகாஷ், சிங்காநல்லூர் – ஸ்ரீநிதி நாயுடு, மயிலாடுதுறை – ஜமால் யூனுஸ் முகமது, அறந்தாங்கி – ராமச்சந்திரன், காரைக்குடி – மாங்குடி, சங்கரன்கோவில் – சங்கை கணேசன், அம்பாசமுத்திரம் – வி.பி.துரை ஆகியோர் போட்டியிடுகின்றனர். <<-se>>#TNElection2026<<>>

News April 3, 2026

திங்கள்கிழமை பள்ளிகள் விடுமுறை.. அரசு அறிவிப்பு

image

தேர்தலையொட்டி புதுச்சேரியில் ஏப்.7 முதல் 10-ம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து அம்மாநில கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது. தற்போது, மாணவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியாக மேலும் ஒருநாள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்.6 (திங்கள்கிழமை) விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளதால், அடுத்த வாரம் முழுவதும் பள்ளிகள் இயங்காது என கல்வித் துறை தெரிவித்துள்ளது. SHARE IT

News April 3, 2026

ஜனநாயகத்துக்கு எதிராக செயல்படும் ECI: வீரபாண்டியன்

image

மத்திய அரசின் தலையீட்டால் தமிழ்நாடு டிஜிபி மாற்றப்பட்டுள்ளதாக CPI மாநில செயலாளர் வீரபாண்டியன் குற்றஞ்சாட்டியுள்ளார். பாஜகவுக்கு ஆதரவாக ECI செயல்படுவது ஜனநாயகத்துக்கு எதிரானது என அவர் சாடியுள்ளார். இத்தகைய பாரபட்சமான போக்கை கைவிட்டுவிட்டு, மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுவதை ECI தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.. <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!