News May 7, 2025
சென்னை ஐகோர்ட் இன்று முதல் ஜூன் 1 வரை விடுமுறை!

இன்று (மே 1) முதல் MHC-க்கு கோடை விடுமுறையாகும். மே 7, 8 தேதிகளில் நீதிபதிகள் மாலா, அருள் முருகன், விக்டோரியா கெளரி ஆகியோரும், மே 14, 15, 21, 22 ஆகிய தேதிகளில் நீதிபதிகள் சுவாமிநாதன், லட்சுமி நாராயணன், நிர்மல் குமார் ஆகியோரும் அவசர கால வழக்குகளை விசாரிக்க உள்ளனர். அதேபோல், நீதிபதிகள் செந்தில் குமார் ராமமூர்த்தி, சத்திய நாராயணா பிரசாத், திலகவதி ஆகியோர் மே 28, 29 தேதிகளில் விசாரிப்பார்கள்.
Similar News
News November 16, 2025
சபரிமலையில் பக்தர்களுக்கு புதிய தடை

<<18300654>>சபரிமலை நடை<<>> இன்று திறக்கப்பட்ட நிலையில், சன்னிதானத்தில் இந்த ஆண்டு முதல் கேமரா, செல்போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் 18-ம் படிக்கு மேல் செல்போன் பயன்படுத்தவும், போட்டோ மற்றும் வீடியோ எடுக்கவும் அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் வருகையை ஒட்டி இந்த கட்டுப்பாடுகளை தேவசம்போர்டு விதித்துள்ளது.
News November 16, 2025
தேவதை வம்சம் நீயோ! தேனிலா அம்சம் நீயோ!

2000-ல் உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ரா திரையுலகில் அறிமுகமான முதல் படம் எது தெரியுமா? தமிழனில் விஜய்க்கு ஜோடியாக நடித்த இவர், அதன் பிறகே பாலிவுட், கோலிவுட் வரை சென்று குளோபல் ஸ்டாராக உருவெடுத்தார். இந்நிலையில் ‘வாரணாசி’ பட விழாவில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை SM-ல் பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் நெஞ்சத்தை கிள்ளாதே பாடலை கேட்க தொடங்கிவிட்டனர்.
News November 16, 2025
சீனா – ஜப்பான் இடையே போர் பதற்றம் அதிகரிப்பு!

தைவானை தாக்க சீனா முயன்றால் ஜப்பான் ராணுவ ரீதியாக பதிலளிக்கும் என்று, அந்நாட்டு பிரதமர் சனே டகாயிச்சி கூறினார். இதற்கு சீன தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததோடு, சீன மக்கள் ஜப்பானுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தனர். இந்நிலையில், இருநாடுகளும் உரிமை கோரும் சென்காகு தீவுக்கு கடலோர காவல் படையை சீனா ரோந்துக்கு அனுப்பியுள்ளது. இது இருநாடுகள் இடையேயான போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.


