News March 18, 2024
செங்கல்பட்டு: எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு சீல்

தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வந்ததை தொடர்ந்து, தாம்பரம் மாநகராட்சியில் சுவர் ஓவியங்கள், சுவரொட்டிகள் அழித்தல், பேனர் அகற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தாம்பரம் மாநகராட்சி, 2ஆவது மண்டல அலுவலக வளாகத்தில் இயங்கி வந்த பல்லாவரம் தி.மு.க., எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு வருவாய் துறை அதிகாரிகள் நேற்று, ‘சீல்’ வைத்தனர்.
Similar News
News January 31, 2026
வண்டலூரில் பெரும் விபத்து!

வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சிக்னலைக் கண்டு அதிர்ச்சியடைந்த டாரஸ் லாரி கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதியது. இதில் லாரி எதிர்திசைக்குத் பாய்ந்து சாலையின் குறுக்கே நின்றது.அப்போது எதிரே வந்த தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் சாதுர்யமாகப் பிரேக் பிடித்து பெரும் விபத்தைத் தவிர்த்தார். காயமடைந்த லாரி ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
News January 31, 2026
செங்கை: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <
News January 31, 2026
செங்கை: ரத்த வெள்ளத்தில் துடித்த மாமியார்

சென்னை புழுதிவாக்கத்தைச் சேர்ந்த ஏழுமலை (39), தனது மனைவி பிரிந்து சென்றதற்குக் காரணம் மாமியார் முனியம்மாள் (55) தான் என ஆத்திரமடைந்து, 2023-ல் அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்தார். இதுகுறித்த நேற்று வழக்கை விசாரித்த செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி எழிலரசி, ஏழுமலைக்கு ஆயுள் தண்டனை மற்றும் 2,000 ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.


