News March 16, 2024

செங்கல்பட்டு :இந்தியா கூட்டணி மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை

image

செங்கல்பட்டு பல்லாவரம் சுரபி மகாலில் நடைபெற்ற I N D I A கூட்டணி கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம்
நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சர் தாமோ அன்பரசன், நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ, க.செல்வம் எம்.பி மற்றும் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Similar News

News January 20, 2026

செங்கை: சொந்த வீடு கட்ட ஆசையா?

image

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். Share பண்ணுங்க!

News January 20, 2026

செங்கல்பட்டு: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

image

செங்கல்பட்டில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 20, 2026

செங்கல்பட்டு: உங்கள் ரேஷன் அட்டை ரத்தாக வாய்ப்பு

image

ரேஷன் அட்டையில் உள்ள உறுப்பினர்கள் e-KYC அப்டேட் செய்யாவிட்டால், அந்த குறிப்பிட்ட உறுப்பினரின் பெயர் நீக்கப்படவோ அல்லது ரேஷன் அட்டை முடக்கப்படவோ வாய்ப்புள்ளது. போலி அட்டைகளைத் தவிர்க்க, உண்மையான பயனாளிகளைக் கண்டறிய உங்கள் ரேஷன் கடைக்கு நேரடியாக சென்று கைரேகை வைத்து அப்டேட் செய்யவேண்டும். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அரசு உதவி எண் 1800 425 5901-ஐ அழைக்கலாம். உடனே இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!