News March 16, 2024

செங்கல்பட்டு: அடையாளம் தெரியாத வாகன மோதி மான் பலி

image

செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூரில் இருந்து கூவத்தூர் செல்லும் சாலையில் தட்டம்பட்டு கிராமம் அருகே இன்று காலை அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதியினர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மானை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

Similar News

News February 10, 2026

பறந்தது செங்கல்பட்டு ஆட்சியரின் உத்தரவு

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் 323 மனுக்கள் பெறப்பட்டன. ஆட்சியர் தி. சினேகா தலைமையில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். வனத்துறை பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், கொத்தடிமை ஒழிப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டு விழிப்புணர்வு கையொப்ப இயக்கமும் தொடங்கப்பட்டது.

News February 10, 2026

ஸ்தம்பித்த தாம்பரம்!

image

தாம்பரம் அடுத்த இரும்புலியூரில் நேற்று (பிப்.9 )விபத்தில் சிக்கிய கார் 5 மணி நேரத்திற்கும் மேலாக அகற்றப்படாமல் கிடந்ததால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். கார் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் பேருந்து மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. 5 மணி நேரத்திற்கு பிறகு பெருங்களத்தூர் – தாம்பரம் சாலையில் போக்குவரத்து சீரானது.

News February 10, 2026

செங்கல்பட்டு: இரவு வெளியே செல்வோர் கவனத்திற்கு

image

செங்கல்பட்டு நேற்று இரவு 12 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!