News February 17, 2025
உங்க செல்போனில் உடனே இதை செக் பண்ணுங்க…

நாம் பயன்படுத்தும் மொபைல் போன் ரேடியோ அலை(RF) கதிர்வீச்சை வெளியிட்டுக் கொண்டே உள்ளது. இதை உடல் ஓரளவுக்கே தாங்கும். அளவுக்கு அதிகமான RF அலைகளை உடல்செல்கள் உட்கவர்ந்தால், கண்கள் மற்றும் விதைப்பைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதை SAR என்ற அளவீட்டில் அளக்கிறார்கள். செல்போன்களின் SAR அளவு 1.6 W/kg வரை மட்டுமே பாதுகாப்பானது என அரசு வரையறுத்துள்ளது. உங்கள் போனின் SAR என்ன என்பதை <<15478395>>இப்படி செக்<<>> பண்ணுங்க.
Similar News
News December 12, 2025
BREAKING: வங்கிக் கணக்கில் ₹1,000 வந்தது

மகளிர் உரிமைத்தொகை ₹1,000 புதிதாக 17 லட்சம் பேரின் வங்கிக் கணக்கில் சற்றுமுன் வரவு வைக்கப்பட்டது. ஏற்கெனவே 1 கோடியே 13 லட்சம் பேர் பயன்பெற்று வரும் நிலையில், இன்று முதல் மேலும் 17 லட்சம் பேருக்கு வழங்கப்படுகிறது. ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் விண்ணப்பித்த பெண்கள் தங்களது செல்போன் எண்ணுக்கு ₹1,000 வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை உடனே செக் பண்ணுங்க. உங்கள் அக்கவுண்டுக்கு ₹1,000 வந்ததா?
News December 12, 2025
குடியுரிமைக்காக USA-ல் பிரசவம்: இனி ‘நோ’ விசா!

USA-வில், அங்கே பிறக்கும் குழந்தைக்கு குடியுரிமை வழங்கும் சட்டம் உள்ளது. எனவே, பிரசவத்தின் போது வெளிநாட்டினர் சுற்றுலா விசாவில் USA செல்வதால், டிரம்ப் இதை முடிவுக்கு கொண்டுவர உத்தரவிட்டார். இதன் மீது, USA SC கோர்ட் முடிவெடுக்க உள்ளது. இந்நிலையில், இந்தியாவின் USA தூதரகம், குடியுரிமைக்காக குழந்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில், சுற்றுலா விசாவுக்கு விண்ணப்பித்தால், நிராகரிக்கப்படும் என எச்சரித்துள்ளது.
News December 12, 2025
FLASH: வெள்ளி விலை ஒரே நாளில் ₹6,000 உயர்ந்தது

<<18540317>>தங்கமும்<<>>, வெள்ளியும் போட்டி போட்டுக் கொண்டு விலை உயர்ந்து வருகின்றன. இன்று(டிச.12) ஒரே நாளில் பார் வெள்ளி கிலோவுக்கு ₹6,000 அதிகரித்துள்ளது. இதனால், 1 கிராம் ₹215-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹2,15,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் இந்திய சந்தையில் வெள்ளியின் விலை வரலாறு காணாத உச்சம் தொட்டுள்ளது.


