News August 12, 2024
எலெக்ட்ரிக் சாதனங்கள் வாங்கும் முன் இதை பார்க்கவும்

நாம் வாங்கும் எலெக்ட்ரிக் சாதனங்கள் போலியானதா என்பதை BIS R-number மூலம் கண்டுபிடிக்கலாம். எலெக்ட்ரிக் பொருட்கள் இந்திய சந்தையில் நுழையும் முன், இந்திய தரநிலைகள் பணியகத்தில் (BIS) பதிவு செய்ய வேண்டும். அதன்படி, அந்த பொருட்களுக்கு R-number வழங்கப்படும். UMANG செயலியில் ‘BIS R number verify’ என்ற விருப்பத்தை தேர்வு செய்து, R-number ஐ உள்ளீடு செய்தால் உற்பத்தியாளரின் அனைத்து தகவல்களும் வந்துவிடும்.
Similar News
News March 13, 2026
இனி RTI-ல் பொதுத்தேர்வு விடைத்தாளை பெறலாம்!

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களுடைய விடைத்தாள் நகல்களை RTI-ன் கீழ் விண்ணப்பித்து பெறலாம் என மாநில தகவல் ஆணையம் (SIC) தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த SIC, RTI கட்டண விதிகளின்படி பக்கத்திற்கு ₹2 செலுத்தி விடைத்தாள் நகல்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது. விடைத்தாள் பராமரிக்கப்படும் அந்த குறிப்பிட்ட காலத்திற்குள் பெற்றுக்கொள்ளலாமாம்.
News March 13, 2026
ஈரானின் அணு விஞ்ஞானியை கொன்றுவிட்டோம்: இஸ்ரேல்

ஈரானின் மூத்த அணு விஞ்ஞானி ஒருவரை கொன்றுவிட்டோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இது ஈரானின் அணு ஆயுத திட்டத்தையும் பலவீனமாக்கியுள்ளதாகவும், ராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு குறிப்பிடத்தக்க அடியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார். மேலும், இஸ்ரேலை அழிக்கத் துடிக்கும் எவரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்று ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News March 13, 2026
கூட்டணிக்குள் செல்கிறாரா விஜய்?

வரும் தேர்தலில் தவெக தனித்து களம் காணும் என ஆதவ், CTR நிர்மல் குமார் உள்ளிட்டோா் கூறி வந்தனர். இந்நிலையில், புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தவெகவின் மா.செ.,க்கள் கூட்டம் காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது. இதில் தனித்து களம் காணலாமா, கூட்டணியில் சேரலாமா என ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதில் தவெகவுக்கு தகுந்த அங்கீகாரம் கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி சேர பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்த தகவல் வெளியாகியுள்ளது.


