News November 28, 2024
சீமானுக்கு ‘செக்’.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

சீமான் மீதான வழக்கை விரைந்து விசாரிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு, இந்திய இறையாண்மைக்கு எதிராக சீமான் பேசியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக அவர் மீது 2018-இல் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை விரைந்து விசாரித்து முடிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இது சீமானுக்கு சிக்கலை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.
Similar News
News August 20, 2025
தங்க நிற கவுனில் மின்னும் தமன்னா..!

அண்மையில் பிரபல ஃபேஷன் டிசைனர் மனிஷ் மல்ஹோத்ரா நடத்திய INAYA பேஷன் நிகழ்ச்சியில் நடிகை தமன்னா கலந்துக் கொண்டார். மனிஷ் மல்ஹோத்ரா வடிவமைத்த தங்க நிற கவுனை அணிந்துக்கொண்டு அவர் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இந்த வைரல் புகைப்படங்களை மேலே கொடுத்துள்ளோம் Swipe செய்து பாருங்கள்.
News August 20, 2025
ஆகஸ்ட் 20: வரலாற்றில் இன்று

*1944 – இந்தியாவின் 6-வது பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்ததினம்.
*1946 – இன்ஃபோசிஸ் நிறுவனத்தை நிறுவிய தொழிலதிபர் நாராயணமூர்த்தி பிறந்ததினம்.
*1858 – சார்லஸ் டார்வின் தனது பரிணாம வளர்ச்சிக் கொள்கையை வெளியிட்டார்.
*1975 – நாசா வைக்கிங் 1 என்ற விண்கலத்தை செவ்வாயை நோக்கி ஏவியது.
*1977 – நாசா வாயேஜர் 2 விண்கலத்தை ஏவியது.
*மத நல்லிணக்க தினம் இன்று.
*உலக கொசு தினம் இன்று.
News August 20, 2025
EPS-க்கு எதிராக போலி அறிக்கை : ஆம்புலன்ஸ் சங்கம்

வேலூர் அருகே அணைக்கட்டில் பிரச்சாரத்தின் போது ஆம்புலன்ஸ் வந்ததால் EPS கண்டித்தார். மேலும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது தாக்குதலும் நடைபெற்றது. இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் அறிக்கை வெளியானது. இந்நிலையில் இந்த அறிக்கை தாங்கள் வெளியிடவில்லை என்றும், சங்க லெட்டர் பேடை அவதூறாக பயன்படுத்தியவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளோம் என தெரிவித்துள்ளனர்.


