News October 7, 2025

சே குவேரா பொன்மொழிகள்

image

▶புரட்சி என்பது பழுத்தவுடன் விழும் ஆப்பிள் பழம் அல்ல, நீங்கள்தான் அதை விழ வைக்க வேண்டும். ▶அதிகமாக சாதிப்பதற்கு, முதலில் நீங்கள் அனைத்தையும் இழக்க வேண்டும். ▶சொல்லின் சிறந்த வடிவம் செயல். செயல்கள் அற்ற வார்த்தைகள் மதிப்பற்றவை. ▶சதுரங்கம் என்பது மனித மூளைக்கு கல்வியையும் பயிற்சியையும் அளிக்கும் ஒரு ஆற்றல்வாய்ந்த வழியாகும். ▶விதைத்துக் கொண்டே இரு. முளைத்தால், மரம். இல்லையெனில், உரம்.

Similar News

News October 7, 2025

பிஹாரில் NDA கூட்டணிக்கே வெற்றி: கருத்துக்கணிப்பு

image

பிஹாரில் NDA கூட்டணி ஆட்சியை தக்க வைக்கும் என Matrize கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. NDA கூட்டணி (BJP, JDU) மொத்தமுள்ள 243 தொகுதிகளில், 150 – 160 இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாகத்பந்தன் கூட்டணி (RJD, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள்) 70 – 85 இடங்களில் வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி 2 – 5 இடங்களில் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

News October 7, 2025

மயக்கும் மாயக்காரி மிருணாள் தாக்கூர்!

image

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று ஜொலித்த சிலரில் மிருணாள் தாக்கூரும் ஒருவர். ‘சீதா ராமம்’, ‘ஹாய் நன்னா’, ‘பேமிலி ஸ்டார்’ படங்களில் கவனம் ஈர்த்த மிருணாள் தாக்கூர் இன்னும் தமிழ் சினிமாவில் நடிக்காதது ரசிகர்களுக்கு வருத்தமே. இந்நிலையில், தனது புதிய போட்டோஷுட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் அவர் பதிவிட, கமெண்ட் செக்‌ஷனை ரசிகர்கள் தங்களது ஸ்பெஷல் கவிதைகளால் நிரப்பி வருகின்றனர்.

News October 7, 2025

வலுவான கால்கள் பெற 4 பயிற்சிகள்

image

கால்கள் தொடர்ந்து செயல்படும்போது, உடலுக்கு சிறந்த ரத்த ஓட்டம் கிடைக்க உதவுகின்றன. இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கு பயனளிக்கின்றன. எனவே, கால்களை வலுவாக வைத்துக்கொள்வது, நீண்டகால ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். வலுவான கால்களுக்கு என்னென்ன உடற்பயிற்சிகள் செய்யலாம் என்று, மேலே போட்டோக்கள் உள்ளன. ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உங்க கால்கள் வலுவாக இருக்கா?

error: Content is protected !!