News September 30, 2025

சே குவேரா பொன்மொழிகள்

image

*நீ ஊமையாய் இருக்கும்வரை, உலகம் செவிடாய் தான் இருக்கும்.
*விதைத்துக் கொண்டே இரு. முளைத்தால், மரம். இல்லையெனில், உரம்.
*அதிகமாக சாதிப்பதற்கு, முதலில் நீங்கள் அனைத்தையும் இழக்க வேண்டும்.
*சொல்லின் சிறந்த வடிவம் செயல். செயல்கள் அற்ற வார்த்தைகள் மதிப்பற்றவை.
* நான் சாகடிக்கப்படலாம். ஆனால், தோற்கடிக்கப்படமாட்டேன்.

Similar News

News September 30, 2025

கனடா வெளியுறவு அமைச்சர் – ஜெய்சங்கர் சந்திப்பு

image

கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் அனிதா ஆனந்தை, ஜெய்சங்கர் நியூயார்க்கில் சந்தித்துள்ளார். கடந்த மே மாதத்தில் தான், புதிய வெளியுறவு அமைச்சராக அனிதா பொறுப்பேற்றார். மேலும், காலிஸ்தான் தலைவர் கொல்லப்பட்டதற்கு இந்தியாவே பொறுப்பு என்ற கனடா முன்னாள் பிரதமரின் குற்றச்சாட்டுக்கு அடுத்து, முதல்முறையாக இச்சந்திப்பு நடந்துள்ளது. இது இருதரப்பு உறவை வலுப்படுத்தும் என்று அனிதா கூறியுள்ளார்.

News September 30, 2025

இட்லி கடை படத்தின் Exclusive Photos

image

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை வெளியாகிறது ‘இட்லி கடை’ படம். தனுஷின் இயக்கத்தில் வெளியாகும் 4-வது படமான இது, அவரது 52-வது படமாகும். நித்யா மேனன், அருண் விஜய், ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ஜி.வியின் இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் புதிய போட்டோஸை மேலே swipe செய்து பாருங்கள். பிடிச்சிருந்தா லைக் போடுங்க.

News September 30, 2025

IND vs WI: மற்றொரு வெஸ்ட் இன்டீஸ் வீரர் விலகல்

image

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இன்டீஸ் அணி, அக்.2-ல் தொடங்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்நிலையில், வெஸ்ட் இன்டீஸ் அணியின் வேக பந்துவீச்சாளர் அல்ஸாரி ஜோசப் விலகியுள்ளார். முதுகில் காயம் ஏற்பட்டு குணமடைந்த நிலையிலும், மருத்துவ அறிக்கையில் காயத்தின் தாக்கம் உள்ளதாக இருந்ததால் அவர் விலகியுள்ளார். ஏற்கெனவே காயம் காரணமாக ஷமார் ஜோசப்பும் விலகினார்.

error: Content is protected !!