News January 23, 2025
உலகம் முழுவதும் முடங்கிய ChatGPT?

AI செயலியான ChatGPT ஆப் செயலிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப் பயன்படுத்தும் போது பயனர்கள் இடையூறுகளை உணர்வதாகவும், முந்தைய Chat History-ஐ அணுக முடியவில்லை எனவும் புகார்கள் தெரிவித்துள்ளனர். செயலிழப்பு நடந்ததை ChatGPT இன்னும் உறுதி செய்யவில்லை. OpenAI நிறுவனத்தின் தயாரிப்புகளான GPT-4 மற்றும் GPT-4 Mini ஆப்கள் இந்த செயலிழப்பை எதிர்கொண்டுள்ளன. உங்களுக்கு ChatGPT வேலை செய்கிறதா?
Similar News
News January 9, 2026
புயல் சின்னம்.. 13 மாவட்டங்களில் மழை அலர்ட்

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்றிரவு 10 மணி வரை, அரியலூர், செங்கை, சென்னை, கடலூர், காஞ்சி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. புதுச்சேரி, காரைக்காலிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாம். கவனம் மக்களே!
News January 9, 2026
நாளை பள்ளிகள் விடுமுறை இல்லை.. கலெக்டர்கள் அறிவிப்பு

சென்னையைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்திலும் நாளை(சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மழை விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, செவ்வாய்க்கிழமை பாடவேளையை பின்பற்றி வகுப்புகளை நடத்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார். மாணவர்களே, ரெடியா இருங்க!
News January 9, 2026
மீண்டும் மீண்டும் பொய் சொல்கிறார் CM: அன்புமணி

திமுக தேர்தல் வாக்குறுதிகளில் 13% மட்டுமே நிறைவேற்றிவிட்டு, 80% நிறைவேற்றியுள்ளதாக CM ஸ்டாலின் கூறுவது முற்றிலும் பொய் என அன்புமணி விமர்சித்துள்ளார். கல்விக்கடன் ரத்து, சமையல் எரிவாயு மானியம், மாதம் ஒருமுறை மின் கட்டணம் கணக்கீடு உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அப்படி இருக்கையில், ஒரு மாநிலத்தின் CM-ஆக இருப்பவர் மீண்டும் மீண்டும் பொய்களை கூறுவது, அவரது பதவிக்கு அழகல்ல என சாடியுள்ளார்.


