News August 19, 2025
₹399 கட்டணத்தில் ChatGPT Go

ஓபன் ஏஐ நிறுவனம் மாதம் ₹399 கட்டணத்தில் ChatGPT Go பிளானை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ChatGPT சந்தா மாதம் ₹1,999 ஆக இருப்பதால் பலரும் அதில் இணைய தயங்கிய நிலையில் இந்த மலிவான பிளான் அறிமுகமாகியுள்ளது. இதில் GPT 5, அதிக மெசேஜ் / இமேஜ் அப்லோட் மற்றும் மேம்பட்ட இமேஜ் ஜெனரேஷன், நீண்ட மெமரி, விரிவான ஆய்வுத்தகவல் அணுகல், Projects, tasks, custom GPTs உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
Similar News
News March 3, 2026
10 MLA-க்களை பெற சீமான் சீரியஸான திட்டம்

கடந்த தேர்தலில் பதிவான வாக்குகளின் அடிப்படையில் காரைக்குடி உள்ளிட்ட 60 தொகுதிகளை சீமான் டிக் அடித்துள்ளாராம். அத்தொகுதிகளில் வீடு வீடாக பிரசாரம் செய்தால் வெற்றி பெறலாம் என்பதே அவரது இலக்கு என தகவல் வெளியாகியுள்ளது. அதிலும், ‘60 லட்சியம்; 10 நிச்சயம்’ என்ற கணக்கில் 10 MLA-க்களை நிச்சயம் இம்முறை பேரவைக்குள் அனுப்பிவிடலாம் என்ற நம்பிக்கையில் சீமான் உள்ளதாக கூறப்படுகிறது. நீங்க என்ன சொல்றீங்க?
News March 3, 2026
விவசாயிகளுக்கு இந்த அடையாள எண் அவசியம்!

ஆதார் கார்டு போல, அனைத்து விவசாயிகளும் ‘விவசாய அடையாள அட்டை’ வைத்திருக்க வேண்டும் என தமிழக விவசாயத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம், அரசின் மானியங்கள், பயிர்க் காப்பீடு & நேரடி நிதி உதவிகளை (DBT) ஊழலின்றி, நேரடியாக கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆதார் எண்ணை கொடுத்து, இந்த அடையாள எண்ணை பெற, <
News March 3, 2026
20 நாள்களில் கூடுதலாக ₹6,000 வழங்கிய தமிழக அரசு

நிதித் திட்டங்களில் பயன்பெறுவோருக்கு 20 நாள்களுக்குள் கூடுதலாக ₹6,000 வழங்கி தமிழக அரசு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. வழக்கம்போல் ₹1,000 உரிமைத் தொகையை எதிர்பார்த்த மகளிருக்கு பிப்.13 அன்று கூடுதலாக ₹4,000 சேர்த்து ₹5,000 வழங்கப்பட்டது. அதேபோல், இன்றைய தினம் மாற்றுத் திறனாளிகள், முதியோர், கைம்பெண் உதவித் தொகை பெறுவோருக்கு மேலும் ₹2,000 சிறப்பு நிதி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


