News April 15, 2025
சாட்டை யூடியூப் – நாதக தொடர்பில்லை – சீமான்

சாட்டை துரைமுருகனின் யூடியூப் சேனலுக்கும், நாதக-வுக்கும் எந்த தொடர்புமில்லை என சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் வருகின்ற கருத்துகள், செய்திகள், அனைத்தும் துரைமுருகனின் தனிப்பட்ட கருத்து எனவும் தெரிவித்துள்ளார். அதில் வரும் கருத்துக்களுக்கு நாதக பொறுப்பேற்காது எனவும் சீமான் கூறியுள்ளார். துரைமுருகனின் சமீபத்திய செயல்பாடுகள், உட்கட்சி பிரச்சனைகளின் காரணமாக இந்த அறிக்கை வந்துள்ளது.
Similar News
News November 22, 2025
மாதவிடாய் தள்ளிப்போகிறதா? சிம்பிள் வைத்தியம்

பெண்களே, மாதவிடாய் சுழற்சி தள்ளிப்போகிறதா? கவலை வேண்டாம். இந்த எளிய விஷயங்களை தொடர்ச்சியாக செய்து வந்தாலே இதனை சரி செய்யலாம். ➤மஞ்சளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் ➤பப்பாளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நிவாரணம் பெறலாம் ➤கொத்தமல்லி இலை, விதைகளை நீரில் கொதிக்க வைத்து கஷாயம் அருந்தலாம் என சித்தா டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் செய்யுங்க!
News November 22, 2025
ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. RBI விளக்கம்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் <<18352591>>குறைந்து ₹89.46 ஆக<<>> உள்ளது. இதனால், கச்சா எண்ணெய், எலக்ட்ரானிக்ஸ் போன்ற இறக்குமதி பொருள்களுக்கு அதிக ரூபாய் செலவிட வேண்டியிருக்கும். இந்நிலையில், இந்தியாவிடம் போதிய அளவில் அந்நிய செலாவணி கையிருப்பு உள்ளதாகவும், நாட்டில் நிதிநிலைத்தன்மையை உறுதிப்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் RBI கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
News November 22, 2025
ஆஸ்கர் வென்ற நடிகருக்கு வீடு கூட இல்லையாம்!

2 முறை ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் நடிகர் கெவின் ஸ்பேசி, வசிப்பதற்கு கூட வீடு இல்லாமல் தவிப்பதாக வேதனை தெரிவித்துள்ளார். பாலியல் குற்றச்சாட்டுக்களில் சட்டப்போராட்டங்களை நடத்தி, அனைத்து சொத்துக்களை இழந்துவிட்டதாகவும், தற்போது பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், மார்டின் ஸ்கார்சஸியும், டாரண்டினோவும் பட வாய்ப்பு வழங்கினால், தனது நிலைமை மாறும் என்றும் தெரிவித்துள்ளார்.


