News December 29, 2024

சார்லி சாப்ளினின் பொன்மொழிகள்

image

▶ இந்த பொல்லாத உலகில் எதுவும் நிரந்தரமில்லை – நம் பிரச்சனைகள் கூட நிரந்தரமில்லை.
▶என் வலி ஒருவரின் சிரிப்புக்கு காரணமாக இருக்கலாம். ஆனால் என் சிரிப்பு ஒருபோதும் ஒருவரின் வலிக்கு காரணமாக இருக்கக்கூடாது.
▶கண்ணாடியே என் சிறந்த நண்பன், ஏனெனில் நான் அழும்போது அது சிரிப்பதில்லை.
▶நேரம் என்பது ஒரு சிறந்த எழுத்தாளர். அது எப்போதும் சரியான முடிவை எழுதுகிறது.

Similar News

News March 5, 2026

கிறிஸ்டோபர் திலக் வங்கிக் கணக்கில் ₹13,000

image

காங்., ராஜ்யசபா வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக் தனது வேட்புமனுவில் ஒரு சவரன் தங்க நகை, வங்கிக் கணக்கில் ₹13,000 மட்டுமே இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இவர் MP-ஆக தேர்வாகும் நிலையில், மிகவும் ஏழ்மையான MP என்ற பெருமையை பெறுவார். 2019-ல் MP ஆன ராஜஸ்தானின் சிகாரைச் சேர்ந்த 67 வயதான சுமேதா நந்த் சரஸ்வதி (₹34,311) நாட்டின் மிகவும் ஏழ்மையான MP என ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் (ADR) அறிக்கை தெரிவிக்கிறது.

News March 5, 2026

ஒருநாளைக்கு 5 மணி நேரம் மட்டுமே பள்ளி..

image

பின்லாந்தின் கல்வி முறை உலகையே ஆச்சரியப்படுத்துகிறது. இங்கு மாணவர்கள் ஒரு நாளைக்கு 5 மணிநேரம் மட்டுமே பள்ளியில் செலவிடுகிறார்கள். ஒவ்வொரு பீரியடுக்கு பிறகு 15 நிமிட இடைவேளையும், சிறிய வீட்டுப்பாடமும் உண்டு. இந்த மன அழுத்தமில்லாத சூழல், குழந்தைகளின் படைப்பாற்றல் மற்றும் கற்றல் ஆர்வத்தை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பின்லாந்து உலகளாவிய கல்வி மதிப்பீடுகளில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

News March 5, 2026

தமிழக தேர்தல் எப்போது? வெளியான அப்டேட்

image

தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் தேதியை <<19301081>>வரும் 13-ம் தேதி<<>> ECI அறிவிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், 2021 சட்டப்பேரவைத் தேர்தலைப் போல் இம்முறை ஏப்ரலில் தேர்தல் நடத்த வாய்ப்புகள் குறைவு எனக் கூறப்படுகிறது. தமிழகத்திற்கு மே மாதத்தில் தேர்தல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 10 உடன் முடிவடைகிறது.

error: Content is protected !!