News December 4, 2024
சார்லி சாப்ளினின் பொன்மொழிகள்

✍எளிமை என்பது எளிதான விஷயமல்ல. ✍நேரம் ஒரு சிறந்த எழுத்தாளன்; அது சரியான முடிவையே எழுதும். ✍உங்களை நீங்களே நம்ப வேண்டும்; அதுதான் வாழ்வின் ரகசியம். ✍ஒரு மனிதனின் உண்மையான குணம் அவன் மதுவை குடித்ததும் வெளியே வரும்.✍உங்கள் வலி ஒருவருக்கு சிரிப்பை ஏற்படுத்தலாம்; ஆனால், உங்கள் சிரிப்பு யாருக்கும் வலியை ஏற்படுத்தக்கூடாது. ✍நீங்கள் கீழேயே பார்த்துக்கொண்டிருந்தால், ஒருபோதும் வானவில்லைக் காணமாட்டீர்கள்.
Similar News
News November 21, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 21, கார்த்திகை 5 ▶கிழமை:வெள்ளி ▶நல்ல நேரம்: 9.00 AM – 10.30 AM ▶ராகு காலம்: 10.30 AM – 12.00 PM ▶எமகண்டம்: 3.00 PM – 4.30 AM ▶குளிகை: 7.30 AM – 9.00 AM ▶திதி: அதிதி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶சந்திராஷ்டமம்: அசுவினி ▶சிறப்பு : சந்திர தரிசனம். சுக்கிரன் வழிபாட்டு நாள் ▶வழிபாடு : மகாலட்சுமி தாயாருக்கு பால் பாயாசம் நைவேத்யம் செய்து வழிபடுதல்.
News November 21, 2025
இந்தியர்களின் சிந்தனை புனிதமானது: RN ரவி

சுதந்திரத்திற்கு முன்பு, பிரிட்டிஷரின் தலையீட்டால், நம் நாட்டின் கலை மற்றும் கலாசாரம் சார்ந்த கூறுகள் மறைக்கப்பட்டதாக கவர்னர் RN ரவி தெரிவித்துள்ளார். மேற்கத்திய கலாசாரத்தை தவிர்த்து, நம்முடைய பாரம்பரிய கலாசாரத்தை பின்பற்ற வேண்டும் என்றும், ஐரோப்பியர்களை விட இந்தியர்களின் சிந்தனை புனிதம் வாய்ந்தது எனவும் கூறியுள்ளார். நமது கலாசாரம், பண்பாடு 5,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்றும் அவர் தெரிவித்தார்.
News November 21, 2025
தூய்மை பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவு

கோவையில் தூய்மை பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவு கொண்டு வந்த செய்தியை கேட்டதும், இப்படி ஒரு திட்டத்தை செயல்படுத்தவே வேண்டாம் என்றே சுயமரியாதை உள்ள எவருக்கும் தோன்றும் என EPS விமர்சித்துள்ளார். அதேபோல், இவ்வாறு செய்த திமுகவின் அரசின் ஆணவம் அருவருக்கத்தக்கதாக உள்ளதாக நயினார் நாகேந்திரனும் சாடியுள்ளார். தூய்மை பணியாளர்கள் உரிய மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.


